பக்கம்:கம்பன் கலை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 ல் கம்பன் கலை தோய்ந்தும் என்று தொடங்கும் அடியின் கருத்து யாது? பொருள் அனைத்திலும் கலந்தும் கலவாமலும் இருக்கும் ஒளியே என்பதுதான் இதன் பொருள். ஒன்று, ஒரு பொருள் மற்றதில் கலந்து நிற்கலாம்; அன்றேல், 66.36,1srLogo இருக்கலாம். ஒரே நேரத்தில் ஒரு பொருள் மற்றொன்றில் கலந்தும் கலவாமலும் எவ்வாறு இருக்க முடியும்? மேவாதவர் இல்லை; மேவினரும் இல்லை' என்ற அடியில் இத்தகைய ஒரு நிலையைத்தான் கவிஞர் பேசுகிறார். முதல், இடை, ஈறு இல்லை என்று கூறுவதால் ஆதியும் அந்தமும் அற்றது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். மேவாதவர் பகைவர், மேவினர் நண்பர் என்ற இரண்டும் முரண்பட்ட நிலைகள். இவை இரண்டும் இல்லையாம் இறைவனுக்கு. மூவாத நிலை-இளமை, மூத்தமை-முதுமை நிலை. இவ்விரு முரண்களிலும் படாதவன் இறைவன். இவ்விதம் முரண்பட்டவற்றுள் ஒற்றுமையாய் இலங்குபவனே இறைவன். ஆழ்ந்து ஆராயாமல் மேலாகப் பார்ப்பவருக்குப் பொருள்களிடம் முரண்பாடு தோன்றுவதுபோல், முழுமுதலிடத்தும் முரண்பாடு தோன்றத்தான் செய்கிறது. எனவே, இம் முரணைக் கடந்து முழுமுதற் பொருளை அறிய மாட்டாதார் அப்பொருளையும் முரண் உடையதாகவே கருதிவிட்டனர். இந்த அடிப்படையில் ஆய்ந்தால் ஒளி என்ற பொருளையும் இருள் என்ற பொருளையும் தனி இயல்புடையனவாகக் காணும் காட்சியில்தான் தவறு உண்டாகிறது என்பது தெரியவரும். மேல் என்ற இயல்பும், கீழ் என்ற இயல்பும் தனித்தன்மையுடையன என்று கருதுவதில்தான் பிழை நேர்கிறது. இவற்றுள் எது உண்மை? - இனி, இதே கருத்தை வளர்த்திச் செல்கிறான் கவிச்சக்கரவர்த்தி, வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/189&oldid=770705" இலிருந்து மீள்விக்கப்பட்டது