பக்கம்:கம்பன் கலை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 ல் கம்பன் கலை ஒருவன் மனத்தே தோன்றும் கருத்தைப் பிறர் செம்மையாக அறிய உதவுவதும் மொழியே; அப்பிறரைத் தவறாக அறியச் செய்வதும் மொழியே வருதல் என்ற சொல்லைச் சற்றுக் காண்போம். இதனை இலக்கண நூலார் தல்' என்ற விகுதி பெற்ற தொழிற்பெயர் என்பர். இச்சொல் எதனைக் குறிக்கிறது? ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பெயர்ந்து செல்லும் நிலையை அறிவிப்பதாகும் இச்சொற்பொருள். நாம் காணும் பொருள் ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பெயர்ந்து வருமாயின் அப்பொருள் வருகிறது என்று கூறுகிறோம். வருதலாகிய இத்தொழிலை அப்பொருள் செய்வதனால் தோன்றும் பயன் யாது? தூரத்தே இருந்த பொருள் நம் அணித்தே வந்ததுதான் பெறும் பயனாகும். இதனையல்லாமல் வேறு பயன் உண்டோ? உண்டு. அப்பொருளை நாம் தொடவும் அனுபவிக்கவும் முடியும். ஆனால், வந்த பொருள் பருப்பொருளாக இல்லாமல் நுண்பொருளாக இருக்குமாயின் தொடுதல் முத்லிய புலன்களின்மூலம் பெறும் அனுபவம் இல்லை என்றாகிவிடும். ஆனாலும், மனத்தளவில் அப்பொருள் ஒரு நிறைவைத் தருகிறது. எனவே நாம் விரும்பும் பொருள் நம்மிடையே வந்துவிட்டது என்பதன் கருத்து அல்லது பயன் யாது? அப்பொருளால் நாம் பெறக்கூடிய பயனை (மனநிறைவை) அடைந்துவிட்டால் பொருளே வந்ததாகத்தானே கருத்து. முழுமுதற் பொருளை ஒருவன் அடைந்துவிட்டால் அதனால் அவன் பெறும் பயன் யாது? மனநிறைவு; ஈடு இணையற்ற மனநிறைவு. இம்மன நிறைவை ஒருவன் பெற்றுவிட்டான் என்றால் அதன் கருத்து யாது? அவன் முழுமுதற் பொருளின் தொடர்பைப் பெற்றுவிட்டான் என்பதேயன்றோ! அப்பொருள் எவ்வாறு வந்தது? எவ் வடிவில் வந்தது? எவ்வழியில் வந்தது? போன்ற வினாக்களை எழுப்பிக்கொண்டு அவன் அவதியுறுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/191&oldid=770708" இலிருந்து மீள்விக்கப்பட்டது