பக்கம்:கம்பன் கலை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 ) கம்பன் கலை வாராதாய் என்று பாடியதும் முரண்பாட்டில் சிக்கியுள்ள நம் போன்றவர்கள் மனநிலையை எடுத்துக்காட்டுவதே யாகும். வாராமலே வருதலும், வந்ததுபோல வாராம விருத்தலும் முரணில் சிக்கி அவதியுறுபவர் காணும் நிலையாகும். முரணற்ற நிலையைச் சிந்திப்பவர்கள் இதில் மயங்குவதில்லை. எனவே, அனுபவ நிலையிலிருந்து கவிஞன் பாடுவதில் முர்ண்பாடின்மையை அறியவேண்டும். அவ்வாறாயின் சொற்களில் முரண்பாடு தோன்றும்படி இக் கவிஞர்கள் ஏன் பாடவேண்டும் என்ற ஐயம் தோன்றும்? அது! சொல்லின் குறைபாடும் பேசுபவனின் குறைபாடுமேயாம். இரயிலில் செல்லும் இருவருள் ஒருவர் கோவை வந்துவிட்டதா?’ என்று கேட்கிறார். இது கேட்பவர் ஒருவரும் சிரிப்பதில்லை. கோவையாவது, வருவதாவது ? அதற்கு என்ன கால்களா முளைத்து விட்டன? என்று கேட்பதுமில்லை. ஏன்? கோவை வந்துவிட்டதா? என்று கேட்பவர் மனத்தில் இருக்கும் பொருள் கோவைக்கு நாம் வந்து விட்டோமா? என்பதே; அதையே கேட்பவரும் தெரிந்து கொள்கிறார். எனவே, சிரிப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால், நேரே சொற்பொருள் காண்பதாயின் சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. கோவைக்கு நாம் வருவதும் கோவை நம்மிடம் வருவதும் பயனளவில் ஒன்றேயாயினும் சொல்லளவில் வேறு வேறுதான். அன்றியும் வருதலாகிய வினையைச் செய்யும் வினைமுதல் நாமாக இருக்கிறோம். அவ்வினையைச் செய்யும் வாய்ப்பு கோயம்புத்துரர் என்ற அஃறிணைப் பொருளுக்கு இல்லை. எனினும், இவ் வினாவில் தவறு காண்பார் ஒருவரும் இல்லை. இவை முரண்பாடுடையன எனக் கூறுவார் ஒருவருமில்லை. 'வாராதே வரவல் லாய்' என்று கவிஞன் கூறும்பொழுது ஏனைய உயிர்கள் போன்று வருதலாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/193&oldid=770710" இலிருந்து மீள்விக்கப்பட்டது