15 இராவணன் மனச்சிறையில் வைத்தது யாரை? பட்டிமண்டபங்கள் பெருத்துவிட்ட இந்த நாட்களில் எதை வேண்டுமானாலும் பட்டிமண்டபத் தலைப்பாகப் போட்டு விடுவது வழக்கமாகிவிட்டது. 'கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா? என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு பட்டிமண்டப நிகழ்ச்சியைக் கேட்கும் துர்பாக்கியம் இக்கட்டுரையாளனுக்கு ஏற்பட்டது. கண்ணகி கட்சியைச் சேர்ந்தவர் பேசும்பொழுது ஒரு கருத்தை வெளியிட்டார். தமிழ் மரபையும், பண்பாட்டையும், தமிழர் நாகரிகத்தையும் பாதுகாப்பதற்குத் தாம் ஒருவர் மட்டுமே நியமிக்கப் பெற்றுள்ளதுபோல அவர் பேசினார். அவருடைய வாதங்களில் முக்கியமானதென்று அவரே குறிப்பிட்ட ஒன்று இங்கு ஆராய எடுத்துக்கொள்ளப் பெறுகிறது. அவருடைய வாதத்தின்படி, ‘கற்புடை மகளிர் பிறர் நெஞ்சு புகார் என்பதுதான் தமிழர்களின் தலையாய கற்பின் இலக்கணமாகும். இதன்படி பார்த்தால் இராவணன் நெஞ்சில் இடம் பெற்றுவிட்ட சீதைக்கு ஒரளவு இழுக்கு நேர்ந்துவிடுகிறதாம். மேலாகப் பார்ப்பவர்கள் பலரும் ஏதோ இது பலமான மறுக்க முடியாத வாதம் என நினைக்கலாம். ஆனால், ஆழ்ந்து நோக்கினால் இது எவ்வளவு பைத்தியக்காரத்தனமானதும்,
பக்கம்:கம்பன் கலை.pdf/195
Appearance