பக்கம்:கம்பன் கலை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவணன் மனச்சிறையில் வைத்தது யாரை ? 187 சோலை அங்கு அதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய சாலையில் இருந்தாள் ஐய! தவம் செய்த தவமாம் தையல்." (திருவடி தொ. படலம், 31) ஒரு பெண்ணை அவள் கணவன் தவிரப் பிற ஆடவன் தொடுவது தவறு என்று அக்காலத் தமிழர் கருதினர் என்பது உண்மை. இக் கருத்துக்கூட இத் தமிழ் நாட்டின் தட்ப வெப்ப நிலையினால் ஏற்பட்டது என்றுதான் கருதவேண்டும். குளிர்ப் பிரதேசங்களில் ஒருவரை ஒருவர். தொடுவதைத் தவறாக யாரும் கருதுவதில்லை. வெப்பம் மிகுந்த இப்பகுதியில் மட்டும் இவ்வாறு கருதினர். இதனால்தான் இராவணன் சீதையைத் தொடவில்லை என்பதைக் கம்பன் பல இடங்களிலும் குறித்துச் சொல்லுகிறான். - "தீண்டிலன் என்னும் வாய்மை ............ - ---------------------------------------- உணர்தி மன்னோ ?" (திருவடி, 33) என்று மறுபடியும் அனுமனைப் பேச வைக்கிறான் தமிழ்க் öLüb_} ☾Y. - சீதை யாரையும் விரும்பி யாருடைய மனத்திலும் புகவில்லை. அவளை எந்த ஆண்மகனும் தொடவில்லை. அனுமன் தன் தோள் மேல் ஏறிக்கொண்டு வரவேண்டும் என்று கெஞ்சியபோதுகூடப் பிராட்டி, "வேறும்உண்டு உரை; கேள் அது; மெய்ம்மையோய் ! ஏறுசேவகன் மேனி அல்லால், இடை - ஆறும் ஐம்பொறி நின்னையும் 'ஆண் எனக் கூறும்; இவ்வுறுத் தீண்டுதல் கூடுமோ ?" (சூடாமணி, 19) என்றுதான் பேசுகிறாள். இராவணன் தன்னைத் தொடவில்லை என்பதையும் அதற்குரிய காரணத்தையும் அவளே கூறுகிறாள்: -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/198&oldid=770715" இலிருந்து மீள்விக்கப்பட்டது