பக்கம்:கம்பன் கலை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 ல் கம்பன் கலை "தீண்டினான் எனின், இத்தனை சேண்பகல் ஈண்டுமோ உயிர் மெய்யின் இமைப்பின்முன் அனுமனிடம் மாண்டுதீர்வென் என்றே, நிலம் வன்கையால் கீண்டுகொண்டு எழுந்துரகினான் கீழ்மையான்.குடாமணி, 20) இவற்றால் இராவணன் பிராட்டியை மறந்தும் தொடவில்லை என்பது உறுதியாகிறது. அடுத்திருப்பது அவனுடைய மனச் சிறையில் பிராட்டியை வைத்தது பற்றியாகும். சீதையை மனச் சிறையில் வைத்தான் என்றும், பின்னர் இராமனுடைய அம்பு அவன் மார்பைத் துளைத்த விதம்பற்றிக் கூறும்பொழுது மனச்சிறையில் வைத்ததை நினைவூட்டும் முறையில் அவன் இருதயத்தைத் துளைத்தோடிற்று என்றும் கம்பன் கூறுகிறானே! இவை இரண்டும் சற்று நின்று ஆராய வேண்டிய இடங்கள். ஒரு பெண்ணிடத்து ஒருவன் ஆசை கொள்கிறான் என்றால் அது எப்பொழுது நடைபெறுகிறது? ஒருத்தியைத் தன் கண்களால் கண்ட பிறகுதானே அவள்மேல் ஆசை கொள்ளமுடியும்? துரய காதலைப் பேசவரும் குறள்கூட அணங்குகொல் ஆய்மயில் கொல்' என்று தலைவன் மன நிலையைக் கூறி உடனே அவனுக்குக் காதல் பிறந்த கதையைக் கூற வருகிறது. அணங்குகொல்' என்று எப்பொழுது கூற முடியும் ஒருத்தியைப் பாராமலே இவ்வாறு கூற முடியுமா? தமிழர் கூறும் தூய காதலுக்காகட்டும், பரத்தையர்மேல்செல்லும் காமத்திற் காகட்டும் ஒருவரை ஒருவர் கண்ணால் காண்டது மிகமிக இன்றியமையாத ஒரு நிகழ்ச்சியாகும். - இதனை வலியுறுத்தும் முறையில் கோவை நூல்களும் அமைந்துள்ளன. தலைவன் இளைப்பதைக் கண்ட அவன் பாங்கன் காரணம் வினவுகிறான். தலைவன் தன் வருத்தத்திற்குக் காரணமான தலைவியைப் புகழ்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/199&oldid=770716" இலிருந்து மீள்விக்கப்பட்டது