பக்கம்:கம்பன் கலை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கம்பன் கலை இங்கே ஒன்றைச் சிந்திக்க வேண்டும். இவ்வளவு தாழ்வாகப் பேசினால் யாருக்குமே ஓர் இரக்கம் தோன்றத்தான் செய்யும். அவன் பக்கம் திரும்பிப் பார்த்து, "நீ என்னவோ சொல்லுகிறாயே என்ன?" என்று கேட்டிருக்கலாம் பரசுராமன். ஒரு வார்த்தைகூட அவன் கேட்கவில்லை. தசரதன் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை என்றால்-ஹாம்லட் என்ற நாடகத்தில் ஷேக்ஸ்பியர் அழகாகச் சொல்லுவார். இரண்டு படங்களை வைத்துக்கொண்டு தாயினிடத்திலே ஹாம்லட் பேசுகின்றான் - இறந்துபோன தந்தையின் படம், தாய் பின் மணந்து கொண்டாளே அந்தச் சிற்றப்பனின் படம் - "லுக் அட் திஸ் பிக்சர் அண்ட் அட் தட்!" "இந்தப் படத்தையும் பார். அந்தப் படத்தையும் பார்" என்று. அதுபோல் இராகவனைப் பெற்ற தசரதன் ஒரு பக்கம்-பரசுராமன் மற்றொரு பக்கம். பரசுராமனுடைய கோபம் - தசரதன் பிள்ளைப் பாசத்தால் தன்மானமிழந்து பேசுகின்ற நிலை. இந்த இரண்டிற்கும் நடுவிலே இராகவன் அகப்பட்டுக் கொண்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்க்கின்றான். இந்தப் பக்கம் தந்தை இவ்வளவு கீழே இறங்குகிறாரே என வருத்தம் ஏற்பட்டிருக்கலாம் இராகவனுக்கு. பரசுராமனுடைய அகங்காரம் தன்னுடைய சுண்டுவிரலாலே தட்டக்கூடியது என்பதையும் அறிந்திருக் கிறான் இராமன். தந்தை இப்படிப் பேசும்போது ஏனையோரைப் போல சாதாரண மகனாக இருந் திருப்பானேயானால்-இராகவன், "அப்பா நீங்கள் - கவலைப்படவேண்டாம். இந்தப் பரசுராமனை இப்போதே இடுப்பை ஒடித்து அனுப்பப் போகிறேன்" என்று சொல்லியிருக்கலாம். ஆனால், அப்படிச் சொல்லி யிருப்பானேயானால், அவன் நம்மைப் போன்ற மனிதன். வாய் பேசாமல் இருந்ததனாலேதான் சக்கரவர்த்தித் திருக்குமாரன் நடையில் நின்றுயர் நாயகனாக'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/20&oldid=770717" இலிருந்து மீள்விக்கப்பட்டது