192 ல் கம்பன் கலை 'சிற்றிடைச் சீதை என்னும் நாமமும் சிந்தை தானும் உற்றுஇரண்டு நன்றாய் நின்றால், நன்றுஒழித்து ஒன்றை உன்ன மற்றொரு மனமும் உண்டோ? (சூர். சூழ். 85) இவற்றில் முதல் பாடலிலுள்ள அடிக்கோடிட்ட மூன்று சொற்களையும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். சீதையை வருணிக்க முடியாது என அவன் தங்கையே கூறிவிட்டாள். அப்படி இருக்கப் பிராட்டியைப் பார்க்காமல், அவளைப் பற்றித் தன் தங்கை கூறியவற்றைக் கேட்ட மாத்திரத்திலேயே மறக்க முடியாமல் அவதிப்பட்டான் என்கிறது முதற் பாடல். . இரண்டாவது பாடல், சீதை என்ற பெயரில் தன் சிந்தையைப் பறிகொடுத்தான் என்று பேசுகிறது. - மூன்றாவது பாடல், பிராட்டியைக் கண்ணால் காண்பதற்கு முன்னமேயே அவளை மனச் சிறையில் வைத்துவிட்டான் என்கிறது. அப்படியானால் இராவணன் மனச் சிறையில் வைத்தது யாரை என்ற வினா நியாயமானதே. தசரதன் மருகியும், ஜனகன் மகளும், இராகவனின் மனைவியுமாகிய சீதை என்பவளை இராவணன் மனச் சிறையில் வைத்திருக்க முடியாது. காரணம் அவளை அவன் பார்த்ததுமில்லை, அவளுடைய ஓவியத்தையாவது கண்டிருப்பானா எனில் கம்பநாடன் கருத்துப்படி அதுவும் இல்லை. அப்படியிருக்க இதயமாம் சிறையில் யாரை வைத்தான்? தன் தங்கை வருணித்த பெண்ணை என்றாவது கூறலாமா? அந்த வருணனையை எத்தனை முறை படித்தாலும் அது சீதையைக் குறிப்பிடுகின்றது என்று யாரும் கூறமுடியாது. எந்த மிக அழகிய பெண்ணை வருணிக்கவும் சூர்ப்பனகையின் சொற்கள் இடந்தரும். அந்த வருணனையில் இலயித்துப்போன இராவணன் தன்.
பக்கம்:கம்பன் கலை.pdf/203
Appearance