பக்கம்:கம்பன் கலை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவணன் மனச்சிறையில் வைத்தது யாரை ? 193 கற்பனையில் இத்தனை அழகுகளையும் உட்படுத்தி ஒரு பெண்ணைக் கற்பனை செய்து கொண்டான். அந்தக் கற்பலைப் பெண்ணுக்கு அவன் இட்ட பெயர் சீதை எனடது. - கற்பனைக்கு இடங்கொடுக்கும் வகையில் அதனை விரித்தவள் சூர்ப்பனகை பெயர் கூறியவளும் அவளே. ஆனால் அதனைக் கேட்ட இராவணன் மனத்தில் சீதை இல்லை. அப்பெயர் மட்டும் நிலைத்துவிட்டது. எனவே, அவன் கற்பனையில் உருவாக்கிய அழகெலாந் திரண்ட கற்பனைப் பெண்ணுக்கு சீதை என்ற பெயர் சூட்டி அக் கற்பனைப் பெண்ணைத் தன் இதயமாம் சிறையில் வைத்தான். எனவே அவன் இதயச் சிறையில் குடியிருந்தவள் தசரதன் மருகியாகிய சீதை அல்லள். அவன் கற்பனைப் பெண்ணுக்கும் தசரதன் மருமகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை; பெயர் மட்டும் இருவருக்கும் பொதுவாக நின்றுவிட்டது. மனித மனத்தத்துவம் அறிந்தவர்கள் இதனை நன்கு விளங்கிக் கொள்ளமுடியும். அழகே இல்லாதவள் என்று யாவராலும் எள்ளி நகையாடப் பெறும் ஒருத்தியை நல்ல அழகனான ஆண்மகன் ஆழ்ந்த காதலுடன் நேசிப்பதை இன்றும் உலகில் காணுகிறோம். இதற்கு நேர்மாறான நிலையும் உண்டு. இது எவ்வாறு முடிகிறது? அழகற்றவள் என்று அனைவரும் கூறும் ஒருத்தி எப்படி அவள் காதலனுக்கு அழகியாக இருக்க முடிகிறது? உண்மை என்னவெனில் அவனவன் மனத்தில் ஒரு கற்பனை உருவை வைத்துக்கொண்டு உண்மைப் பொருளிடம் அதனைச் சார்த்திக் (Projecting) காண்கிறான். அழகற்றவள் என்று நாம் கூறும் ஒருத்தியிடம் தன் கற்பனை அழகை ஏற்றிக் காண்பதால் ஒருவன் அவள்பால் எல்லையற்ற அன்பு Gerului (puņ_@pgj, ‘Robert Louis Stevenson’ argàrp golff Gir ‘. i3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/204&oldid=770722" இலிருந்து மீள்விக்கப்பட்டது