பக்கம்:கம்பன் கலை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 & கம்பன் கலை எழுதிய OnFallinginLove என்ற கட்டுரையைப் படித்தால் இதனை விளங்கிக் கொள்ள முடியும். - தன் கற்பனையில் உருவாக்கிய சீதையை மனச் சிறையில் அடைத்துவிட்ட இராவணன் அவளிடம் மாளாக் காதல் கொண்டுவிட்டான் என்பது உண்மை. இராகவன் மனைவியாகிய உண்மைச் சீதையைக் கண்ணால் காண்பதற்குப் பன்னெடு நாள்கள் முன்னரே இராவணன் மனம் கற்பனைச் சீதையால் நிறைந்துவிட்டது. இதனால்தான் தவக் கோலத்துடன் சென்று பிராட்டியைக் காணும் இராவணன் அவள் மரவுரி உடுத்துத் தவக் கோலமும், முனிவன் மனைவி கொடுத்த அணிகலன்களைப் பூண்டுள்ளமையால் இல்லறக் கோலமும் கொண்டுள்ளதைப் பார்க்கும்பொழுது அவனுக்கு ஒன்றும் புதுமையாகத் தோன்றவில்லை. 'கற்பினுக்கு அரசியைக் கண்ணின் நோக்கினான் இரா. சூழ்-26) என்று கவிஞன் கூறுவது சிந்திக்க வேண்டிய இட்மாகும். தவக்கோலமும், கற்பும் நிறைந்த ஒருத்தியைக் காணும்பொழுது எவ்வாறு இராவணன் மனத்தில் வேறுவிதமான எண்ணம் புகுந்தது? இங்கும் பிராட்டியிடம் காணப்பெறும் அழகு அறிவை மயக்கி மனத்தைப் பேதலிக்கச் செய்கின்ற அழகன்று. அமைதியையும், தன்னுணர்வையும் தருகின்ற இந்த அழகு இராவணனை மட்டும் எவ்வாறு மயக்கி இருக்க முடியும்? இதனால்தான் இராகவன் மனைவியைக் காணும்பொழுது இராவணன் அவளைக் காணாமல் தன் கற்பனையில் நிறைந்துள்ள சீதையை இந்த உண்மைச் சீதையின்மேல் ஏற்றிக் காண்கிறான் என்று நினைக்க வேண்டியுள்ளது. (He Projects the form ofhis own imaginary Sita on the real Sita.) இந்தக் கருத்து வலுப்பட மற்றோர் இட்த்தையும் கவிஞன் காட்டுகிறான். அசோக வனத்தில் இருக்கும் பிராட்டியின் நிலையினைக் கூறவந்த கவிஞன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/205&oldid=770723" இலிருந்து மீள்விக்கப்பட்டது