பக்கம்:கம்பன் கலை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவணன் மனச்சிறையில் வைத்தது யாரை ? 195 'கல்மருங்கு, எழுந்து என்றும் ஒர்துளிவரக் காணா நல் மருந்துபோல், நலன் அற உணங்கிய நங்கை, மென் மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்தாள் (காட்சி-3) இப்படி அழகு கெட்டு வாடித் துயரமே உருவாய் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணிடம் சென்று கீழே விழுந்து வனங்கி, 'மதிக்கு மேனி தோற்பித்தீர்' என்றும், • , "குடிமை மூன்று உலகும் செய்யும் கொற்றத்து என் அடிமை கோடி; அருளுதியால்' எனா முடியின் மீது முகிழ்த்து உயர்கையினன் படியின்மேல் விழுந்தான். (காட்சி-114) என்றும் பேசப்படுகிறது. இவ்வாறு இராவணன் செய்தான் என்றால் அதை மென் மருங்குல் போல் வேறுள அங்கமும் மெலிந்துள்ள ஒரு பெண்ணிடம் செய்ய ஒருப்படுவானா? மெலிந்துள்ள அப்பிராட்டியை அவன் பார்க்கும்பொழுது அவள்மேல் தன் கற்பனையில் நிறைந்துள்ள ஒருத்தியை ஏற்றிக் காண்பதனாலேயே இவ்வாறு அவனால் பேசவும் செய்யவும் முடிகின்றது. - இதுவரை கூறியவற்றை ஆழ்ந்து சிந்தித்தால் இரண்டு உண்மைகள் புலனாகும். முதலாவது, ‘கற்புடை மகளிர் பிறர் நெஞ்சு புகார் என்ற அடிப்படையில் பிராட்டியின்மேல் தவறுகள் கூறுவது அறியாமை. இதன் பொருளை உள்ளவாறு உணர்ந்து கொண்டவர்கள் இப்பிழையைச் செய்யமாட்டார்கள். இரண்டாவது, இராவணன் மனச் சிறையில் வைத்தது இராகவன் மனையாட்டியை அன்று. அவனுடைய கற்பனையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/206&oldid=770724" இலிருந்து மீள்விக்கப்பட்டது