தீக்குளித்தது ஏன்? 9 199 'யாது யான் இயம்புவது? உணர்வை ஈடு அறச் சேதியா நின்றது உன் ஒருக்கச் செய்தியால் சாதியால் அன்று எனின் தக்கது ஓர் நெறி போதியால் என்றான் புலவர் புந்தியான்' (மீட்சி, 69) என்றும் கூறினதாகக் கவிஞன் பாடுகிறான். ஆனால் இங்ஙனம் கருணை இன்றிக் கடுஞ் சொல் கூறிய இராகவனைக் கவிஞன் புலவர் புந்தியான் என்ற சொற்களால் குறிப்பதும் நம் நினைவில் இருத்தத் தக்கது. இராகவன் பிராட்டியை ஏசிய இத்தனையும் கணவனும் மனைவியும் தனி இடத்தில் இருக்கும்பொழுது நடைபெறவில்லை. பலர் முன்னிலையில், அதுவும் சிறப்பாக அனுமன் முன்னிலையில்தான் இவ்வாறு பேசினான். இதிலுள்ள பொருத்தமின்மையையும் கவனிக்க வேண்டும். பிராட்டி இருக்குமிடத்தைக் கண்டவன் அனுமன்; இராகவனிடம் அத்தகவலை வந்து கூறியவனும் அனுமன். இலங்கையில் பகைவனுடைய சிறையில் பிராட்டி எவ்வாறு இருந்தாள் என்பதை நேரில் கண்டவன் மாருதி. தான் கண்டவற்றையும், பிராட்டி அனுப்பிய சூடாமணியையும், அவள் கூறிய செய்திகளையும் இராமனிடம் சேர்ப்பித்தவன் அனுமனேயாவான். அந்த அனுமன் எத்தகையவன்? இராகவனால் நன்கு மதிக்கப்பட்டவன். 'சொல்லின் செல்வன் என்று அந்த இராமனாலேயே பாராட்டப் பெற்றவன். இந்த அனுமன் 'கல்லாத கலைகளே உலகத்து இல்லை என்றும் அந்த உலகங்கள் அனைத்துமே இந்த அனுமனின் இசையைக் கூறிக்கொண்டிருக்கும் என்றெல்லாம் புகழ்த்தவன் இதே இராகவன்தான். எனவே, அனுமனிடத்தும் அவனுடைய அறிவுத்திறம், கல்விப் பெருமை என்பவற்றிலும் இராமனுக்கு அளவற்ற நம்பிக்கையும் மதிப்பும் உண்டு என்பதும் விளங்குகிறது. அத்தகைய அனுமன்
பக்கம்:கம்பன் கலை.pdf/210
Appearance