பக்கம்:கம்பன் கலை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 ல் கம்பன் கலை "ஒருபகல் பழகினார் உயிரை ஈவரால்; பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும்நீ வெருவலை நின்றனை; வேறுஎன் ? யான்.இனி, எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென்' இரா. சூழ்ச்சி, 13) என்று கூறிவிட்டுக் காட்டுத் தீயில் விழப் புறப்பட்டு விட்டாள். இக்கொடிய செயலைத் தடுப்பதற்குச் சக்தியற்ற இளையவன், "போகின்றேன் அடியனேன்; புகுந்து வந்து கேடு ஆகின்றது (1) என்றும் "வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ?” என்றும் கூறிப் போய்விட்டான். இராவணன்ால் கவர்ந்து செல்லப்பட்ட பிராட்டி தன் அவசர புத்தியால் செய்துவிட்ட இப்பிழையை நினைந்து நினைந்து வருந்துகிறாள். இலக்குவன் பிராட்டியைக் காவல் செய்வதை விட்டுவிட்டுத் தன்னிடம் ஏன் வந்தான் என்று இராமன் கேட்டால் தான் பேசியதை இலக்குவன் இராமனிடம் கூறி இருப்பான். தன் தம்பியின் அருமையையும் தன் கணவனின் ஆற்றலையும் இத்துணைக் காலம் அவர்களுடன் வாழ்ந்தும் அறிந்து கொள்ள முடியாத சிற்றறிவு படைத்தவள் என்று இராமன் தன்னைக் கருதி உதறி விட்டுவிடுவானோ என்ற அச்சம் பிராட்டியின் அக மனத்தில் இருந்தது. அவளுடைய அடி மனத்தில் புதைந்துள்ள இந்த அச்சத்தின் அடிப்படை அவள் இழைத்த மாபெரும் தவறு. ஆதலால் அதை அடிக்கடி அசோக வனத்தில் நினைத்து வருந்துகிறாள். - ‘என்னை, நாயகன், இளவலை எண்ணலா வினையேன் சொன்ன வார்த்தை கேட்டு 'அறிவிலள் எனத்துறந்தானோ? - (காட்சிப் படலம், 14) 'கண்டிலன் கொலாம் இளவலும்桑弹崔鹏 胜随 t (12)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/213&oldid=770732" இலிருந்து மீள்விக்கப்பட்டது