பக்கம்:கம்பன் கலை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீக்குளித்தது ஏன்? 203 'வஞ்சனை மானின் பின் மன்னைப் போக்கி, என் மஞ்சனை வைது பின்வழிக் கொள்வாய் எனா நஞ்சனை யான் அகம் புகுந்த நங்கை யான் உய்ஞ்ச னென் இருத்தலும், உலகம் கொள்ளுமோ? (உருக்காட்டு, 17) இந்த மூன்று எடுத்துக்காட்டுகளுள் முதலாவது பாடலில் சொன்ன வார்த்தை என்றும் மூன்றாவது பாடலில் வைது' என்றும் இருக்கின்ற சொற்கள் ஆராயப்பட வேண்டியன. வான்மீகி சீதை கூறியனவாக இவ்விடத்தில் கூறியுள்ள எந்த ஒரு சொல்லையும் கம்பன் பயன்படுத்தவில்லை. அவன் படைத்துக் கொண்ட பாத்திரப் படைப்பின்படி சீதை அத்தகைய் சொற்கள் எதையும் தன் வாயால் கூறமாட்டாள்; ஏன்? மனத்தாலும் நினைக்கமாட்டாள். அப்படியானால் வைது என்று பிராட்டி கூறுவது எதைக் குறிக்கும்? இராவணன் சூழ்ச்சிப் படலத்தில் ஒரு பகல் பழகினும் (18) என வந்த பாட்டில் சீதை இராமனிடம் ஒரு நாள் பழகினவர்கள்கூட உயிரைக் கொடுக்கத் தயாராக இருப்பர். பெருமகனாகிய இராமன் இறக்கின்றான் என்பதை அவன் குரல் மூலமாகக் கேட்டும்கூடத் துடிதுடித்துப் போகாமல் நிற்கின்றாய். வேறு என்ன நினைப்பது? என்ற கருத்தில் பேசுகிறாள். இதில் உள்ள இரண்டு சொற்கள் வேறு என்' என்பவையே அவள் வைததாகப் பின்னர் கூறப்பெற்றவை. இந்தச் சொற்களின் பொருள்தான் என்ன? இராமனுக்கு இந்த நேரத்தில் நிகழ்ந்ததை அறிந்தும்கூட நீ நடுக்கமில்லாமல் நிற்கின்றாய் என்றால் உன் எண்ணம் தவறான வழியில் போகத் தொடங்கிவிட்டது என்று நான் நினைப்பது தவிர வேறு என்ன நினைக்க முடியும்? இதற்கு மேல் இதனை விரித்துக் கூறத் தேவையில்லை. இலக்குவனை இவ்வாறு கூறிய பெருந்தவறு அவளுடைய மனத்தில் ஏற்பட்ட குற்ற உணர்வு. x - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/214&oldid=770733" இலிருந்து மீள்விக்கப்பட்டது