பக்கம்:கம்பன் கலை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 ல் கம்பன் கலை இந்தக் குற்ற உணர்வு ஆழமாக அப்பிராட்டியின் மனத்தில் பதிந்துவிட்ட காரணத்தால் இராமன் தன்னை மீட்க வராமல் போனாலும் போகலாம் என்ற நினைவும் பதியத் தொடங்கி விட்டது. வலுவில் இராவணன் துரக்கி வந்தது தவிர வேறு ஒரு தவறும் நிகழவில்லையே. அதுவும் இளையவன் தொடுத்த பர்ணசாலையில்தானே இன்னமும் இருக்கின்றாள். அனுமனிடம் பேசும்போது, எத்துணைத் துணிச்சலுடன் இராவணன் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிய அவள் அதற்குச் சான்று காட்டுபவள் போல, 'ஆண்டு நின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய நீண்ட சாலையோடு நிலை நின்றது காண்டிஐய! நின் மெய் உணர் கண்களால் (சூடாமணி, 24) என்று அனுமனிடம் கூறுகிறாள். எனவே, தவறு ஒன்றும் நிகழவில்லை என்பது உறுதிப்பட்டு விட்டது. அப்படியானால் பிராட்டியின் ஆழ்ந்த துயரத்துக்குக் காரணம் யாதாக இருக்கும்? எத்தகைய பகைவராயினும் அவர்களை அழித்துத் தன்னை மீட்கும் ஆற்றல் பெற்றவன் தன் கணவன் என்பதிலும் அவளுக்கு ஐயம் இல்லை. பின்னர் ஏன் இந்த வருத்தம்? தன் உயிரை மாய்த்துக்கொள்வதே வழி என்ற முடிவுக்கு வருவதற்கு முன்னர் அவள் கூறும் சொற்கள் சிந்திக்க வேண்டியவை: 'நிறை இரும்பல் பகல், நிருதர் நீள்நகர்ச் சிறை இருந்தேனை அப்புனிதன் தீண்டுமோ? - 'கற்புடை மடந்தையர், கதையுளோர்கள்தாம் இல் பிரிந்து உய்ந்தவர் யாவர் யான் அலால் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/215&oldid=770734" இலிருந்து மீள்விக்கப்பட்டது