தீக்குளித்தது ஏன்? 207 கொண்டதாகக் காட்டிக்கொண்டு தரும் தண்டனையில் முழு அமைதி பெறமாட்டார்கள். எனவேதான் இந்த நாடகம். பிராட்டியை முதன் முறையாக இலங்கையில் இராகவன் கண்டான் எனக் கூற வந்த கவிஞன், ‘கற்பின் அத்தலைவனும் அமைய நோக்கினான் (மீட்சி, 60) என்றுதானே கூறினான். இராமன் கொடுமையாகப் பேசியதும் அக்கினிப் பிரவேசத்துக்குத் தடை கூறாமல் இருந்ததும் உண்மையில் அன்பின்மை யாலோ வன்கண்மையாலோ அன்று. 'கற்பின், அத்தலைவன் அதாவது அன்பால் நிறைந்த இராகவன் என்று கவிஞன் அடைமொழி கொடுத்துப் பேசுவது நம்மை எச்சரிக்கவேயாகும். அமைய நோக்கினான்’ என்றால் நீண்ட காலம் பிரிந்த காதலன் காதலியைக் காண்பது போல அவன் காணவில்லை. அவளை ஊடுருவி அவளுடைய அக மனத்துட் புகுந்து பார்த்தான் என்பதைத்தான் அமைய என்ற சொல்லால் கவிஞன் நிறுவுகிறான். மருத்துவன் நோயாளியைப் பார்ப்பது போன்ற பார்வை அது. - பிராட்டியின் மன நோயை ஒரு விநாடியில் அறிந்துகொண்டு அவளுக்கு மருத்துவம் செய்யத் தொடங்குகிறான். இவ்வாறு ஏசி வெருட்டாமல் அவளை அன்புடன் அவன் ஏற்றுக் கொண்டிருப்பின் அவளுடைய குற்ற உணர்வு காரணமாக இலக்குவனைப் பார்க்கும் போதெல்லாம் மனத்தில் ஒரு ந்ெருடல் இருக்கும். அன்றியும் தன் கணவன் தன்னைப் பழைய அன்புடன் ஏற்றுக் கொண்டானா இல்லையா என்ற ஐயமும் இருக்கும். இவற்றைப் போக்கவே இராகவன் நாடகமாடுகிறான். 'அவள் தூயவள், கற்பின் கனலி, தவம் செய்த தவமாம் தையல் என்று நன்றாக அறிந்திருந்தும் ஊன் உண்டாய்! கள் குடித்தாய்! என்றெல்லாம் ஏசினான்.
பக்கம்:கம்பன் கலை.pdf/218
Appearance