210 ல் கம்பன் கலை முறைக்கும் இடந்தருவதாக அமைந்துள்ளது. திரு வேரகத்தில் வழிபடுபவர்கள் வேதம், உபநிடதம் முதலியவற்றைக் கற்றுத் தேர்ந்து இறைவன் எத்தகையவன், தாங்கள் எத்தகையவர்கள், தங்களுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு யாது என்பதைத் தம் நுண்ணிய அறிவின் துணை கொண்டு ஆய்ந்து, பின்னர் இறைவனிடம் அன்பு செலுத்துபவராவர். பழமுதிர் சோலை முதலிய இடங்களில், அறிவின் துணையில்லாத சாதாரண மக்கள் ஆழமான நம்பிக்கை, பக்தி என்பவற்றின் துணை கொண்டு இறைவன்ை வழிபடுகின்றனர். இக் கூட்டத்தாருக்கு இறைவனுடைய இயல்பு, இலக்கணம் என்பவைபற்றி ஒன்றுந் தெரியாது. அவன் நிர்க்குண நிராமயன் என்று அவர்கள் அறிய வாய்ப்பில்லை. என்றாலும், இறைவன் இருவகைக் கூட்டத்தார்க்கும் வேண்டினர் வேண்டியாங்கு, வழிபட ஆண்டாண்டு உறைகின்றான்' என்கிறது திருமுருகாற்றுப் Լ1ճծ)t-, . திருமுருகாற்றுப்படை காட்டிய இந்த இரண்டு வழிகளில் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு வழி மிகுதியும் தமிழ் மக்களால் கையாளப்பட்டதை இந்நாட்டு வரலாறு நன்கு காட்டிச் செல்கிறது. கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை, பக்தி இயக்கக் காலம் என்று கூறல்வேண்டும். சைவ சமய நாயன்மார்களும், வைணவ சமய ஆழ்வாராதிகளும், பக்தி மார்க்க்த்திற்குப் பெரிதும் இடம் கொடுத்து மக்களைத் தட்டி எழுப்பி இறை உணர்வை ஊட்டினர். 10, 11 ஆம் நூற்றாண்டுகளில் பக்தி இயக்கத்தின் வலுக்குறையலாயிற்று. 8 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய ஆதிசங்கர பகவத்பாதருடைய அத்வைத மார்க்கம், அறிவுவழியைப் பின்பற்றத் தொடங்கியது. 12ஆம் நூற்றாண்டில் இராமனுசர் விசிட்டாத்வைதத்தைத் தோற்றுவித்து வளர்த்தார்.
பக்கம்:கம்பன் கலை.pdf/221
Appearance