220 கம்பன் கலை வருதல் முதலிய கருத்துகளையும் அவன் ஏற்றுக் கொள்கிறான் என்று தெரிகிறது. உணர்வு நிலையில் நின்று இறைப்பொருளைப் பற்றிப் பேசுவதாகும். இதே கம்பநாடன் அறிவுவழி நின்று இறைப்பொருள் பற்றி ஆயவும் தயங்கவில்லை என்பதையும் காணமுடிகிறது. முன்னர்க் குறிப்பிட்டாங்கு ஒவ்வொரு காண்ட முதலிலும் கடவுள் வாழ்த்து என்ற பெயரில் ஒவ்வொரு பாடல் பாடி ஆங்காங்கே அவன் கண்ட இறை இலக்கணத்தைக் கூற முற்படுகிறான். 'ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப" (அயோ-1) 'பேதியாது நிமிர்பேத உருவம் பிறழ்கிலா ஒதிஓதி உணருந்தொறும் உணர்த்தி உதவும் வேதம், வேதியர், விரிஞ்சன் முதலோர் தெரிகிலா ஆதிதேவர்; அவர் எம் அறிவினுக்கு அறிவரோ? ஆரண்ய-) தோன்று உரு எவையும் அம்முதலைச் சொல்லுதற்கு ஏன்று.உரு அமைந்தவும் இடையில் நின்றவும் சான்று உரு உணர்வினுக்கு உணர்வு' (கிட்கி-1) இவற்றை அல்லாமல் விராதன் வதை, சரபங்கன் பிறப்பு நீங்கு, பிணி வீட்டுப் படலங்களிலும் தத்துவ அடிப்படையில் அறிவுபூர்வமான ஆய்வில் ஈடுபட்டு இறை இலக்கணம் பேச முற்படுகிறான். இறைப்பொருளை வடிவற்றதாகவும் வடிவுடைய தாகவும் உயிர்கள்மாட்டுக் கருணை உடையதாகவும் மேலே கூறியுள்ள முறையில் பாடிய கவிஞன் இவற்றை எல்லாம் விட்டுவிட்டு முழு முதற் பொருளாக உள்ள ஒன்றின் இலக்கணத்தையும் கூற வருகிறான். நாயன்மார்கள், ஆழ்வார்கள் கூறும் இறைப் பொருளிலும் இவன் கூறும் அது மாறுபட்டு விளங்கக் காணலாம். அவர்கள் கூறும்
பக்கம்:கம்பன் கலை.pdf/231
Appearance