கவிஞன் கண்ட சமரசம் 221 இறைப் ப்ொருள் நாம ரூபம் உடையதாய், அனைத்து நன்மைகளும் உடையதாய், சத்துவ குணமுடையதாய் விளங்கக் காணலாம். அவர்கள் வழி நின்று அதே முறையில் பேசிய கவிஞன் அவர்களினும் பிரிந்து நாம ரூபமற்ற முழு முதல் பொருளைப்பற்றிப் பேசும் பொழுது அவர்களினும் வேறுபட்டும் தனித்தும் நிற்கின்றான். நம்மாழ்வார் பக்தி நிலையில் நின்று அர்ச்சாவதார வடிவில் ஈடுபட்டுப் புராணக் கதைகளையும் ஏற்றுக் கொண்டு நிரம்பப்) பாடியிருப்பினும் திருவாய்மொழி முதற்பத்தின் ஒன்பத்ாம் பாடலாகிய, 'உளன் எனில் உளன் அவன், உருவம் இவ்உருவுகள் உளன் அலன் எனில், அவன் உருவம் இவ்வருவுகள் உளன் என இலன்என இனங்குணம் உடைமையில் உளன் இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே - நாலாயிரம்-2090) என்ற இப்பாடல் கம்பநாடனின் உபநிடதப் படிப்பிற்கு மிகவும் உகந்ததாக இருந்திருத்தல் வேண்டும். எனவே, இக்கருத்தைத் தன்னுடைய இராம காதையில் யுத்த காண்டத்தின் கடவுள் வாழ்த்தர்கப்பாடிச் செல்கிறான். “ஒன்றே என்னில் ஒன்றேயாம் பலவென்று உரைக்கில் . பலவேயாம் அன்றே என்னில் அன்றேயாம், ஆமே என்னில் ஆமே யாம் இன்றே என்னில் இன்றேயாம் உளதுஎன்று ரைக்கில் . . . . ." - - உளதேயாம்' என்ற பாடலில் இந்நாட்டுத் தத்துவ ஞானிகள் கண்ட முடிபைக் கவிஞன் ஏற்று அற்புதமான கவிதையாக வடிப்பதைக் காண முடிகிறது. இந்த உலகிலும் சரி அண்டம் முழுவதும் சரி. அனைத்திலும் முரண்பாடு இருப்பதைக் காண முடிகிறது.
பக்கம்:கம்பன் கலை.pdf/232
Appearance