பக்கம்:கம்பன் கலை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 கம்பன் கலை நன்மை-தீமை, ஒன்று-பல; உண்டு-இல்லை; ஒளி-இருள்; பகை-நட்பு: விருப்பு-வெறுப்பு: இன்பம்-துன்பம் முதலிய இதற்கு உதாரணமாகும். பிற நாடுகளில் தோன்றிய சமயவாதிகள் இந்த முரண்பாட்டை அறிந்த பிறகு இறை இலக்கணம் பேசும் பொழுது நன்மை, ஒளி, இன்பம் என்பவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு இறை இலக்கணமாகப் பேசினர். அதனால் இவற்றின் மறுதலையான தீமை, இருள், துன்பம் என்பவற்றிற்கு இடந்தரவில்லை. எனவே, இவற்றின் கொள்கலனாகச் சாத்தானைப் படைக்க நேர்ந்தது. இந்நாட்டவர் பொதுவாகவும், தமிழர் சிறப்பாகவும் இதனினும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தனர். இவர்கள் இறையிலக்கணம் பேசும்பொழுது இந்த முரண்பாட்டிலேயே முழுமுதலைக் கண்டனர். நம்மைப் பொறுத்தவரை இந்த முரண்பாடு பெரிதாக்கப்பட்டாலும் இவை இரண்டுமே பொருளற்றவை எனக் கூறினர். இந்த முரண்பாட்டில் முரண்பாட்டைக் காணாமல் இருப்பவர்களே சமநிலை பெற்ற ஸ்திதப் பிரஞ்ஞர்கள் என்று கூறினர். சமதிருஷ்டி பெற்றவன் எதையும் நன்மை என்றோதமை என்றோ-ஒளி என்றோ இருள் என்றோ கருதியதில்லை. அவர்கட்கு ஒன்றன்மாட்டு விருப்பும் இல்லை; வெறுப்பும் இல்லை. மனிதரில் உயர்ந்து நிற்கும் சமதிருஷ்டி உடையவர்கட்கே இது இலக்கணமும் என்றால் இறைவனுடைய இலக்கணமும் அதுவே என்று கூறத் தேவையில்லை. இந்தக் காலத்தில் கம்பநாடன் மிகுதியும் ஈடுபட்டிருந்தான் என்பதற்கு அவனுடைய காப்பியத்தில் நிரம்பச் சான்றுகள் உள்ளன. 'மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ! பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ! வாலி-129) என்ற பாடலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/233&oldid=770754" இலிருந்து மீள்விக்கப்பட்டது