பக்கம்:கம்பன் கலை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபெரும் அவதாரங்கள் 0 17 துடையில் அடித்துக் கொன்றதையடுத்துப் பெரும் கோபம் கொள்ளுகிறான்- இது மாபெரும் தவறு, யுத்த தர்மத்திற்கு விரோதம் என்று. ஆனால் துரியோதனன் உயிரோடு இருக்கின்ற வரையில் அறத்தை நிலை நிறுத்த முடியாது; அறத்தை நிலைநிறுத்த வேண்டுமேயானால் சிலவற்றை விட்டுத்தான் கொடுக்கவேண்டும். என்றோ ஒருகாலத்தில் மனிதர்கள் வைத்துக்கொண்ட அறம் 'ஒருவனை யொருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று உலகத்து இயற்கை எனப் புறநானூறு சொல்வதுபோல, இப்படித்தான் சண்டை போட வேண்டுமென்று வகுத்துக் கொண்டார்கள். அந்தச் சட்டம் அணுகுண்டு யுகத்தில் செல்லுபடியாகாது. எங்கே யார் இருக்கிறார்கள் என்று தெரியாமலே குண்டு போடுகிற உலகம் இது. கிருஷ்ணாவதாரத்திலே உள்ள சிறப்பு என்ன வென்றால் மனித சமுதாயம் வளர்ந்து அறிவு வளர்ச்சி பெறப் பெறப் பழைய சட்டங்கள், பழைய நெறிகள் துரக்கி எறியப்படவேண்டும். 'இன்றைக்கு உலகம் நடைபெற வேண்டுமென்றால் இந்த முறையைத்தான் கையாள வேண்டும் என்று புதிய புதிய சட்டங்களை வகுத்துக் காட்டுவது கிருஷ்ணாவதாரத்தினுடைய வேலையாகும. இருந்தபோதிலும் பழைமையை நினைவூட்டுவது பரசுராமனுடைய வேலை. இவற்றையெல்லாம் சிந்திப்போமேயானால் இந்த இரண்டு அவதாரங்கள் ஏன் என்ற வினாவுக்கு ஒருவாறு விடை கண்டவர்களாக ஆவோம் என்பதை நினைத்துப் பார்த்து ஒர் அமைதி கொள்ள முடியும். அவதாரங்கள் இரண்டு என்று சொன்னவுடனே நம்மையும் அறியாமல் இரண்டும் முரண்பட வேண்டும் என்று நினைக்கிறோம். எப்போதும் பொருள் ஒன்றாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/25&oldid=770759" இலிருந்து மீள்விக்கப்பட்டது