பக்கம்:கம்பன் கலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கம்பன் கலை இருக்கிற வரையில் முரண்பாடு இல்லை, பிரச்சின்ை இல்லை. இரண்டு என்று சொல்லிவிடுவோமேயானால் முரண்பாடும் போராட்டமும் வரத்தான் செய்யும். ஆக இரண்டு அவதாரங்கள் என்று சொன்னவுடனே நம்மையும் அறியாமல் எதிர்பார்க்கின்றோம். ஒரே பொருள் பரம்பொருள். இரண்டு அவதாரம் எடுத்து ஒன்றை ஒன்று மோதிக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இது பரம்பொருளிடத்துக் குற்றம் அல்ல. பரம்பொருள் அவதாரம் எடுப்பதே உலகத்து மக்களிடத்துச் சில வழிமுறைகளைக் காட்டவேண்டும் என்பதற்காகத்தான். அதுவே இரண்டாகப் பிரிந்து வந்து ஆணவத்தின் பயன் என்ன, அகங்காரத்தின் பயன் என்ன, எந்த நிலையிலே நீ உயர்ந்து சென்றாலும் இறுதியாக ஆணவம் என்பது அழிக்கப்படவேண்டிய ஒன்று, அகங்காரம் என்பதும் அழிக்கப்படவேண்டிய ஒன்று என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் பரசுராமாவதாரமும் இராமா வதாரமும் காட்சி தருகின்றன. அப்படியானால், இரணியன் இல்லையா, அந்த வரலாறு போதாதா FTSðfêl}fft fj. . - இரணியன் போன்று இருக்கக் கூடியவர்கள் பல தவங்களைச் செய்து தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டவர்கள். பரசுராமனைப் பொறுத்தமட்டில் அவனும் தவம் செய்தவன்தான். ஆனால் அந்தணர் குலத்தில் பிறந்தவன்; ஜமதக்னி முனிவருடைய மகன். ஆகவே அவனுக்கு அக்ங்காரமும் சினமும் நிச்சயமாக இருக்கக் கூடாது. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான் - . ஆயிற்றே. ஜமதக்னி முனிவன் அப்படி வாழ்ந்தவன் ஆயிற்றே! அவனுக்கு இப்படி ஒரு பிள்ளையா! இதுவும் ஒரு விந்தைதான்! . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/26&oldid=770760" இலிருந்து மீள்விக்கப்பட்டது