பக்கம்:கம்பன் கலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியர் மூவர் ஏன்? 21 உண்டாகும்? உண்மையான இன்பம் அனுபவிப்பவனிடம் பொலிவைக் காணலாம். இனி, சமதிருஷ்டி பெற்றுவிட்ட சாந்தமூர்த்தியின் முகத்தினும் பொலிவைக் காண முடியும். புதல்வரால் பொலிந்தான் என்பதற்குப் புதல்வர்கள் காரணமாகப் பொலிவைப் பெற்றான் தசரதன் என்று பொருள் கொண்டால் தவறு இல்லை. இதனைக் காணும் பொழுது ஒர் ஐயம் தோன்றத்தான் செய்கிறது. அறத்தின் மூர்த்தியாகிய இராமனையும், தருமத்தின் உரைகல் எனப்படுபவனாகிய பரதனையும், தொண்டுக்காகப் பிறப்பெடுத்த இலக்குவனையும், ஒப்பற்ற சத்துருக்கனையும் பெற்ற தசரதனுக்கு இதுவரை தோன்றாத பொலிவு இப்பொழுது தோன்றக் காரணம் அந்நான்கு புதல்வர்களிடமும் காணப்படாத ஏதோ இயல்புகள் இம்மூவரிடமும் இருந்திருக்க வேண்டும். அதனால், ஒருவேளை இவர்களும் உரிமையால் புதல்வர்கள் ஆனபோது பொலிவடைந் தானோ? ஆழ்ந்து நோக்கினால் இவ்வாறு கூறுவதிலும் ஒரு பொருள் இருக்கக் காணலாம். தசரதனைப் பொறுத்தமட்டில் இராமன் முதலிய நால்வரையும் பெற்றான் என்றாலும் அவர்களில் யாரேனும் ஒருவருடைய இயல்பையோ பண்பையோகூட அவன் அறிந்திருந்தானா என்பது ஐயத்திற்குரியதே! இராமன் பரம்பொருள் என்பதை அவன் அறிய முடியாமல் அவனுடைய பிள்ளைப் பாசம் மறைத்து விட்டது. சிவ தனுசை ஒடித்தவன் என்று அறிந்திருந்தும் பரசுராமன் எதிர்ப்பட்டவுடன் தன் மைந்தனின் பேராற்றலை அறிய இயலாத தசரதன், பெண்களைப் போலப் புலம்புகிறான். இராமனையே அவன் அறிந்து கொள்ளவில்லை எனின், ஏனையோரை அவன் அறிந்து கொள்ளாமல் போனதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/29&oldid=770763" இலிருந்து மீள்விக்கப்பட்டது