பக்கம்:கம்பன் கலை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியர் மூவர் ஏன் ? 25 மீனையும் கொண்டு வருகிறான். இராமனைக் கண்டு அன்பு கொள்ள வந்துள்ளானே தவிர அவனிடம் எதனையும் எதிர்பார்த்து வரவில்லை. எனவேதான் அவன் வந்துள்ளான் என்று இராமனிடம் விண்ணப்பம் செய்யச் சென்ற இலக்குவன், "கொற்றவ, நின்னைக் காணக் குறுகினன், நிமிர்ந்த கூட்டச் சுற்றமும், தானும், உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்' (குகப்-11) என்று கூறுகிறான். 'உள்ளம் தூயவன்; தாயினும் நல்லவன் என்பன இளைய பெருமாள் குகனுக்குத் தந்த அடைமொழிகள். உள்ளே சென்று இராமனைக் காணுகிறான் குகன். அவன் 'இருக்க' என்று பணித்தபோதும் அமரவில்லை. தான் கொணர்ந்த உணவை இராமன் முன்னே வைத்து "தேனும் மீனும் அமுதினுக்கு இயைவதாகத் திருத்தினன் கொணர்ந்தேன் என்கொல் திருவுளம் ?’ (18) என்று பேசுகிறான். மேலும் "இப்பார் குலாம் செல்வ, நின்றனை" இங்ங்ணம் பார்த்த கண்ணை ஈர்கிலாக் கள்வனேன் யான், இன்னலின் இருக்கை நோக்கித் தீர்கிலேன்" () என்றும் பேசுகிறான். முன்பின் பார்த்திராத இராமன்மாட்டுக் குகனுக்கு ஏற்பட்ட அன்பு சிறிது சிறிதாகத் தோன்றி, பழகப் பழக முதிர்ந்த அன்பு:அன்று, தோன்றும்பொழுதே முழுவதாகத் தோன்றிய அன்பாகும் இது. இந்த அன்பை வழியாகக் கொண்டு குகன் எதனையும் பெற விரும்பவில்லை. இந்த அன்பையே பயனாகக் கொண்டவன். இதனாலேயே பெருமான் இவனை ஏற்றுக்கொண்டான். இதற்கு மறுதலையாக, ஞானத்தால் இராமனை இன்னான் என்று தெரிந்துகொண்டு அவனிடம் ஆட்பட்டவன் வீடணன். பெருங் கல்வியாளனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/33&oldid=770768" இலிருந்து மீள்விக்கப்பட்டது