பக்கம்:கம்பன் கலை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கம்பன் கலை ஞானியுமாகிய அவன் அனுமன் மூலம் இராமனைப் பற்றி அறிய நேர்ந்தது. இறை அன்பு ஓரளவு அவனிடம் இருந்தது. ஆனால் அந்த அன்பு அவனுடைய ஞானம் வளர்வதற்குத் துணை புரிந்ததோடு சரி. அவன் வளர்ச்சியைக் கவிஞன் நன்கு வெளிப்படுத்துகிறான். என் கண் எதிரில் நில்லாது ஒழிக’ என இராவணன் கூறியவுடன் துணைவர் நால்வருடன் வீடணன் கடற்கரைக்கு வந்துவிட்டான். தன்னுடன் வந்த துணைவரை மேலே செய்யத்தக்கது யாது என வினவினான். அவர்கள் "இராமனைச் சென்று காண வேண்டும்” என்றனர். இவர்கள் கூறியதைக் கேட்ட மாத்திரத்தில் வீடணன் 'நல்லது சொல்லினிர்!’ என்று கூறிவிட்டுத் தன் மனநிலையை உடன் கூறத் தொடங்குகிறான்: 'முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்; அன்புறக் காரணம் அறியகிற்றிலேன்; என்புறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன் பின்புறப் பிறவியின் பகைஞன் போலுமால்...' எல்லையில் பெருங்குணத்து இராமன் தாளினை புல்லுதும்; புல்லி இப்பிறவி போக்குதும்.' - . . . . (வீட. அடை. 20. 19) இவ்விரண்டு பாடல்களும் வீடணன் ኒD ፴፫ நிலையையும் குறிக்கோளையும் நன்கு அறிவுறுத்துகின்றன. முன்பின் பாராவிட்டாலும் இராமன் பெயரைக் கேட்டளவில் எலும்புகள் குளிருகின்றனவாம். நெஞ்சு உருகுகின்றதாம். இவை இரண்டு செயல்களும் இறை அன்பு பூண்டார் மாட்டு உண்டாகின்ற மெய்ப்பாடுகள். அந்த அன்பையும் அதன் விளைவுகளாகிய இந்த மெய்ப் பாடுகளையும் வீடணன் கருவியாகவே பயன்படுத்துகிறான். இத்தகைய உருக்கத்தை ஒருவன் பெயர் உண்டாக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/34&oldid=770769" இலிருந்து மீள்விக்கப்பட்டது