பக்கம்:கம்பன் கலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கம்பன் கலை தேவை இல்லை. அதற்கும் ஒரு வழி உண்டு என்று காட்டுதற்காகவே சுக்ரீவன் படைக்கப்பட்டுள்ளான். சாதாரண மனிதன் தன் அறிவாலும் கேள்வி ஞானத்தாலும் பரம்பொருளின் உண்மையை அறிந்துகொண்டாலும் ஒரளவு அப்பரம்பொருளிடத்து பக்தி செய்தாலும் இடை இடையே சந்தேகம் வருவது வாழ்க்கையில் நாம் கண்ட அனுபவமேயாகும். நம்முடைய பக்தியும் ஞானமும் முழுத் தன்மை பெறாமல் உள்ளன. ஒரு சிலருக்கு வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவம் இந்தப் பக்தியையும் ஞானத்தையும் வளர்க்கப் பயன்படுகின்றது. நல்லவர்கள் தொடர்பும் நல்ல கேள்வி ஞானமும் நாளா வட்டத்தில் நம் பக்தியையும் ஞானத்தையும் வளர்க்க உதவுகின்றன. நம் போன்ற சராசரி மனிதனுடைய நேர் பிரதிநிதியாக சுக்ரீவன் இருக்கிறான். அனுமன் கல்வியுடையவன். "இல்லாத உலகத்து எங்கும், இங்கு இவன் இசைகள் கூறக் கல்லாத கலையும் வேதக் கடலுமே இல்லை" (அனுமன் -18) என்று இராமனே கூறும்படியான அனுமன் சுக்ரீவனின் உற்ற துணைவனாகவும் அமைச்சனாகவும் உள்ளான். அந்த அனுமன்தான் இராம இலக்குவர்களைப் பற்றிச் சுக்ரீவனிடம் விவரமாகக் கூறி அவனை அவர்களிடம் அழைத்துச் சென்றான். சுக்ரீவன் இராமனைக் கண்ட இயல்பையும் அவனுடைய மன நிலையையும் கவிஞன் கூறுகின்றான்: "நோக்கினான்; நெடிது நின்றான்; நொடிவரும் " ... . . கமலத்தண்ணல் ஆக்கிய உலகம் எல்லாம், அன்று தொட்டு இன்று காறும் பாக்கியம் புரிந்த எல்லாம் குவிந்து, இரு படிவம் ஆகி மேக்குயர் தடந்தோள் பெற்று வீரராய் விளைந்த' என்பான், தேறினன்-அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே, மாறி, இப்பிறப்பில் வந்தார் மானுடர் ஆகி மன்னோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/37&oldid=770772" இலிருந்து மீள்விக்கப்பட்டது