பக்கம்:கம்பன் கலை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ) கம்பன் கலை - வீடணன் சரணத்துக்கும் சுக்ரீவன் சரணத்துக்கும் உள்ள வேறுபாட்டை எளிதில் அறிய முடியும். பரம்பொருள் என்று தன் ஞானத்தால் அறிந்த பிறகே வீடணன் அடைக்கலம் புகுந்தான், பரம்பொருளையன்றி வேறு யாரிடமும் அவன் தன்னை ஒப்படைக்க இசைய மாட்டான். ஆனால் சுக்ரீவன் சாதாரண மனித இயல்பு படைத்தவனாகலின் தன்னுடைய அப்போதையத் தேவையை யார் பூர்த்தி பண்ண முன் வருகிறார்களோ அவர்களிடம் அப்போதைக்குச் சரணம் புகுந்துவிடுவான். வாலியைக் கொல்லக்கூடியவன் இராமன் ஒருவனே என்று அவன் அறிவு கூறியதால் மட்டுமே அவன் இராமனிடம் சரணம் புகுந்தான். - இந்த அன்பு முழுத்தன்மை பெற்றது. அன்று என்பதை அறிந்துகொள்ள நீண்ட ஆராய்ச்சி தேவை இல்லை. வாலி இறந்த பிற்கு தன் படைகளைத் திரட்டி வரக் கொஞ்ச காலம் ஆகும். அதுவரைப் பொறுத்திருக்க வேண்டும் என்று இராமனிடம் கேட்டுக்கொண்டு தன் அரண்மனை சென்ற சுக்ரீவன், வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கிவிட்டான். இராமனை அறவே மறந்துவிட்டு, அவனுக்குத் தான் தந்த வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டுப் பெருங்குடியனாக வாழத் தொடங்கிவிட்டான். அனுமனாலும், வாலியின் மனைவியாகிய தாரையாலுங்கூட அவனைத் திருத்த முடியவில்லை. இன்பங் கண்டவிடத்து இறைவனை மறந்து இன்பவேட்கையில் ஈடுபடும் சராசரி மனிதனாகவே சுக்ரீவன் உள்ளான். அவன் நிலையை இராமனே, 'பெறல் அருந் திருப்பெற்று, உதவிப் பெரும் திறம் நினைத்திலன்; சீர்மையின் தீர்ந்தனன், அறம் மறந்தனன், அன்பு கிடக்க, நம் மறம் அறிந்திலன்; வாழ்வின் மயங்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/39&oldid=770774" இலிருந்து மீள்விக்கப்பட்டது