பக்கம்:கம்பன் கலை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 & கம்பன் கலை மக்கட்பண்பில்லா தவர்” (992) என்று அறநூல் பேசுகிறது. திருவள்ளுவர் மக்கட்பண்பு என்று கூறுவது அறிவும் உணர்வும் கலந்த ஒரு நிலையையேயாகும். இத்தகைய அறிவு, உணர்வுக் கூட்டில் பல சமயங்களில் விநோதமான சூழ்நிலை ஏற்படுவதும் உண்டு. அறிவு சரி என்று கூறுவதை உணர்வு ஏற்றுக்கொள்ள மறுப்பதும், உணர்வு ஒப்புவதை அறிவு ஏற்க மறுப்பதும் விநோதமான சூழ்நிலையை உருவாக்கும். சராசரி மனிதனுக்கு அறிவைவிட உணர்ச்சியே தலைதூக்கி நிற்கும. சுக்கிரீவன் இதற்குச் சிறந்தவோர் எடுத்துக் காட்டாவான். புதியவர்கள் யாரையேனுங் கண்டால் வாலியால் அனுப்பப் பெற்ற பகைவர்கள் என்று கருதி அஞ்சுவது அவனது இயல்பு. மலையின் மேல் இராம இல்க்குவர் ஏறி வருவதைக் கண்டவுடன், "செய்வது ஓர்கிலன்; அனையர் தெவ்வர் ஆம்என வெருவி, உய்தும் நாம், என விரைவின் ஓடினான், மலை முழையின்' (அனும- என்கிறார் கவிச்சக்கரவர்த்தி, இந்நிலையில், அறிவின் எல்லை. கண்ட மாருதி, மறைந்து நின்று வருகின்றவர்களின் உடலமைப்பு, கண்கள் முதலிய வற்றையும் அவர்கள் உள்ளப் பாங்கையும் நன்கு அறிந்து, அவர்கள் எதிரே சென்றான். இராமனிடம் சில சொற்களே அவன் பேசினாலும் இராமன் மாருதியையும், மாருதி இராமனையும் மிக நன்றாக அறிந்து கொண்டனர். தன் தலைவனாகிய சுக்கிரீவனுக்கு ஈடு இணையற்ற துணையைச் சம்பாதித்து விட்டான் மாருதி. மீட்டு வந்து, சுக்கிரீவன் முதலியவர்களை ஒருங்கு சேர்த்து, வந்தவர்கள் யாவர், அவர்களால் சுக்கிரீவனுக்கு என்ன நலம் ஏற்படும் என்பதை மிக விரிவாக 15 பாடல்களில் நட்புக் கோள் முதல் 15) கூறுகின்றான் அஞ்சனை சிங்கம். மாருதி தன் தலைவனாகிய சுக்கிரீவனை நன்கு எடைபோட்டு வைத்திருந்தான் என்பதை விளக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/43&oldid=770779" இலிருந்து மீள்விக்கப்பட்டது