பக்கம்:கம்பன் கலை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ல் கம்பன் கலை தனக்கு விடிவு காலம் வந்துவிட்டது என்று கூறவும், உணர்வு அச்சத்தையும் சந்தேகத்தையும் கிளறிவிடவும் இருதலைக்கொள்ளி எறும்பாக உள்ளான் அவன். இம்மாதிரியான மனநிலையுடன்தான் இராமனைக் காணச் சென்றான். கமலக்கண்ணனைச் சென்று கண்டான்: நோக்கினான், நெடிது நின்றான். உலகங்கள் அனைத்தும் செய்த புண்ணியம், வீரர் இருவர் வடிவு பெற்று வந்தது என்ற முடிவுக்கு வந்தான், இன்னும் ஒரு படி மேலே சென்று, "ஆறுகொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி வேறுள குருவை எல்லாம், மானுடம் வென்றது அன்றே" (நட்பு-19) என்ற முடிவுக்கும் வந்துவிட்டான். இராமனாகிய பரம்பொருளை அடைந்துவிட்டால் தான் பெறவேண்டிய பேறு வேறு இல்லை என்ற நினைவு அவனுக்கு ஏனோ வந்ததாகத் தெரியவில்லை. இவ்வாறு ஈடுபட்ட சுக்கிரீவனை உடன் இருத்திக் கொண்ட இராகவன், தான் அவனை நாடிவந்த காரணத்தை அழகாகக் கூறுகிறான். í á

  • * * *ния в микм и в на и «-ии и акая и к а на யாங்கள் உற்ற கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேம் ஐய! நின் தீரும் என்ன, அரிக்குலத் தரசன் சொல்வான்"

(நட்பு-24) தான் இருக்கும் இடம் தேடி வந்த விருந்தினர்கள் இப்பொழுது தங்கள் துயரத்தைப் போக்க வேண்டும் என்று வாய் திறந்து கேட்கிறார்கள். கேட்பவர்கள் சாதாரண மனிதர் அல்லர். சுக்கிரீவனே அவர்கள் எத்தகையவர்கள் என்பதை நன்கு அறிந்துள்ளான். அவ்வளவு பெருமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/47&oldid=770783" இலிருந்து மீள்விக்கப்பட்டது