பக்கம்:கம்பன் கலை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனின் பிரதிநிதி 39 வாய்ந்தவர்கள். தன் போன்ற சாதாரணக் குரங்கை நாடி என்றுமே வராதவர்கள் இப்பொழுது வந்ததுடன் அல்லாமல் தன்னிடம் உதவியும் கேட்கிறார்கள். "கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேம்” (24) என்று அவர்கள் வாய்விட்டுக் கேட்ட பிறகு மிகச் சாதாரணமான ஒருவன் கூட, "ஐயா! என்னால் ஆன உதவியைச் செய்யக் காத்துக்கொண்டிருக்கிறேன்' என்றுதானே கூறல் வேண்டும். - - ஆனால், 'உன் உதவியை நாடி வந்துள்ளேன்' என்று குறை இரந்து நிற்கும் இராமனுக்குச் சுக்கிரீவன் கூறிய விடை, அவனது மனநிலையையும் பண்பாட்டையும் நன்கு விளக்குவதாக உள்ளது. இராமனை நோக்கி, "என் அண்ணன் செய்யும் கொடுமைக்கு அஞ்சி இம்மலையில் வாழ்ந்து வருகிறேன். இப்பொழுது உன்னைச் சரண் அடைகின்றேன். என்னைத் தாங்குதல் நினது கடன்" என்ற பொருளில், “முரணுடைத் தடக்கை ஒச்சி, முன்னவன்; பின்வந் தேனை இருள்நிலைப் புறத்தின் காறும், உலகு எங்கும் தொடர - இக்குன்று அரண்உடைத் தாகி உய்ந்தேன்; ஆருயிர் துறக்க லாற்றேன் சரண் உனைப் புகுந்தேன்! என்னைத் தாங்குதல் தருமம் என்றான்" நட்பு-25) தன் வேண்டுதலுக்கு ஒரு விடையுங் கூறாமல், தன் குறையைக் காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் அவனுடைய துயரைப்பற்றிப் பேசி, நின்னைச் சரண் அடைந்தேன்' என்று கூறும் ஒருவனை இராகவன் இதற்குமுன் சந்தித்ததில்லை. முதன்முறையாகப் பார்த்தவுடனேயே "நின்னை இங்ங்னம் பார்த்த கண்ணை ஈர்கிலாக் கள்வனேன் யான்” (குகப்படலம் 17 என்று கூறிய குகனும் ஒரு தம்பியாக ஏற்றுக்கொள்ளப் பெறுகிறான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/48&oldid=770784" இலிருந்து மீள்விக்கப்பட்டது