பக்கம்:கம்பன் கலை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கம்பன் கலை டோடும் இல்லை; விரும்பியும் ஏற்றுக்கொண்டனர். முதலில் வசிட்ட முனிவன் தன் கருத்தைக் கூறத் தொடங்கித் தசரதன் முடிவு முற்றிலும் சரி என்றே கூறிவிட்டான். அந்த முனிவனை அடுத்துப் பேச வேண்டியவர்கள் அமைச்சராவர். ஆனால், பெருங் கூட்டமாக உள்ள அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பேசுதல் என்பதும் இயலாத காரியம். எனவே, அவர்கள் தம்முடைய சார்பில் முதலமைச்சனாகிய சுமந்திரனைப் பேசுமாறு வேண்டினர். அவ் வேண்டுதல் ஏனையோர் வெளியிடு முறையிலும் வெளியிடப்பெறவில்லை. "செவியிற்கண்டு கண்ணிற் கூறல்" நீதிநெறி விளக்கம், 28 அமைச்சர், அரசர் ஆகிய இருவருக்கும் உரித்தாகும் அல்லவா? "குறிப்பிற் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்” (குறள்) என்ற வாக்கை மெய்ப்பிக்கும் அமைச்சர், குழுவன்றோ அது. எனவே, அம் மதியமைச்சர்கள் தம்முடைய கண்களின்மூலமே கருத்தை வெளியிட்டனராம். ஏனையோருக்காயின் அவர்கள் முகக் குறிப்பால் அவர்களுடைய எண்ணத்தை அவ்வளவு எளிதாக அறிந்து கொண்டிருக்க வியலாது. ஆனால், “மும்மையும் உணர வல்லோர்” என்று புகழப்பட்ட அவ்வமைச்சர் குழுவின் தலைவனாய சுமந்திரனுக்கா அறிய இயலாது? அமைச்சர் குழுவை ஒருமுறை பார்த்தவுடன் அவர்கள் கருத்தை எளிதாக அறிந்து விட்டான். அவர்கள் உள்ளக் கருத்து "தம் முகத்தால் எழுதி நீட்டியது போல் (மந்திரப்படலம், 45 இருந்ததாம். எனவே, ஒரு செய்தியை எழுதி முகத்தின் எதிரே நீட்டினால் அது படிப்பதற்கு எவ்வளவு எளிதாக இருக்குமோ அவ்வளவு எளிதாக இருந்ததாம் அவர்களுடைய எண்ணத்தை அறிந்து கொள்வதற்கு. இவ்வாறு கூறுவதால் சுமந்திரனுடைய நுண்மாண் நுழைபுலத்துக்கும் குறிப்பறிகின்ற வன்மைக்கும் ஒர் எல்லை வகுக்கிறான் கவிஞன். இதுவரை சுமந்திரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/58&oldid=770795" இலிருந்து மீள்விக்கப்பட்டது