பக்கம்:கம்பன் கலை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ) கம்பன் கலை இரண்டு செயல்களைச் செய்யப் போவதாய் அறிவித்தான் அல்லனோ? அவன் கூறிய இரண்டுள் முதலாவது இராமனுக்கு அரசை நல்குதல் இரண்டாவது தான் துறவு பூண்டு காடு சென்று தவமியற்றுதல். இவற்றை மிகத் தெளிவாக அம் மன்னவன், - "ஆதலால் இராமனுக்கு அரசை நல்கிஇப் பேதைமைத் தாய்வரும் பிறப்பை நீக்குவான் மாதவம் தொடங்கிய வனத்தை நண்ணுவேன் யாதுநூம் கருத்துஎன இனிது கூறினான்" (மந்திரப் படலம், 31) என்ற பாடல்மூலம் வெளியிடுகிறான். எனவே, இந்த இரண்டு கருத்துகள் பற்றியும் தன் முடிவைச் சுமந்திரன் கூறவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டுவிட்டது. முதலாவதாக உள்ள கருத்தை ஏற்றுக்கொண்டு விட்டதாக விரிவாகவே விடை அளித்துவிட்டான். - இரண்டாவதாகத் தசரதன் கூறியது காடுசென்று தவஞ் செய்யவேண்டும் என்பது. இக்கூற்றுச் சுமந்திரனை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது என்றே கூற வேண்டும். வயது முதிர்ந்த இரு நண்பரிடையே இம் மன நிலையைக் காணலாம். இரண்டு கிழவர்கள் ஒய்வு பெற்றவர்கள், நீண்ட நாட்களாய் நட்புடன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்களுள் ஒருவர்க்கு நோய் கண்டு விட்டால் மற்றவர் படும் பாட்டைச் சொல்லித் தீராது. நண்பனுக்கு நோய் வந்து விட்ட வருத்தம் ஒருபுறம்; வயது முதிர்ந்து விட்டபடியால் தனக்கும் அத்தகைய நோய் வரலாம் என்று நினைக்கும்பொழுதே தோன்றும் கவலை மற்றொரு புறம். அதேபோலத் தசரதன், "கிழவனாகி விட்டேன்; வனம் புகுந்து தவம் இயற்றவேண்டும்", என்று கூறும்பொழுதே அமைச்சன் சுமந்திரனுக்குப் பெரியதோர் அதிர்ச்சி ஏற்படுகிறது. நாள்தோறும் அரசனைக் கண்டு பழகினவனாகலின் அவனுடைய கிழத்தனத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/64&oldid=770802" இலிருந்து மீள்விக்கப்பட்டது