பக்கம்:கம்பன் கலை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூரிய தேர்வலான் , 57 அணிந்துகொண்டு அதனைக் கேடயத்தால் மறைத்துக் கொண்டு எதிரே வந்து ஏனாதி தன்னை அணுகியவுடன் மூடியிருந்த கேடயத்தை எடுத்தான். பகைவனே ஆயினும் அவன் நெற்றியில் நீறு இலங்கக் கண்ட ஏனாதி அவனைக் கொல்லாமல் அவனே தன்னைக் கொல்லட்டும் என்று வாளா இருந்துவிட்டார். வந்த பகைவன் அவரைக் கொன்று விட்டான். ஆனால், ஏனாதி நாதரை வஞ்சகத்தால் கொன்றான் என்று கூற விரும்பாத ஆசிரியர் மங்கலமாக அதனைக் கூறுகிறார். "அந்நின்ற தொண்டர் திருவுள்ளம் யார்அறிவர் முன்நின்ற பாதகனும் தன்கருத்தை முற்றுவித்தான்" (எனாதிநாத நாயனார் புராணம், 40) தன் கருத்தை அவன் முடித்தான் என்று கூறுவதால் ஆசிரியர் தம் வாயாற் கூற விரும்பாத ஒன்றை மறைமுகமாகக் கூறிவிடுகிறார். மேலும் மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றிலும் இத்தகையதொரு சந்தர்ப்பம் வருகிறது. முத்திநாதன் மெய்ப் பொருளை வஞ்சகத்தால் கொல்ல நினைத்தான். இவ்வாறு நினைத்தான் என்று கூறும்பொழுதும் ஆசிரியர் வெளிப்படையாகக் கூறாமல், "செப்பரும் நிலைமை எண்ணித் திருக்கோவ லூரில் சேர்ந்தான்" - (மெய்ப்பொருள் நாயனார் புராணம், 6) என்றே கூறுகிறார். திருக்கோவலூரை அடைந்த முத்திநாதன் மெய்ப்பொருளை வஞ்சனையாற் குத்தி விட்டான். இந்த நிலையிலும் குத்திவிட்டான் என்று தம் வாயாற் கூறத் துணியாத ஆசிரியர், - 'பத்திரம் வாங்கித் தான்முன் நினைந்தஅப் பரிசே செய்ய" (மெய்ப்பொருள் நாயனார். புராணம், 15)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/67&oldid=770805" இலிருந்து மீள்விக்கப்பட்டது