இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மூரிய தேர்வலான் 59 ஆனால், அவர்கள் மாட்டு உண்மை அன்பு இருந்தால் தான் உள்ளம் களிப்புறக் காணமுடியும். இதோ சுமந்திரன் கண்ட நிலையைக் கவிஞன் வருணிக்கிறான்: "பெண்ணின் இன் அமுது அன்னவள் தன்னொடும்பிரியா வண்ண வெஞ்சிலைக் குரிசிலும் மருங்குஇனிது இருப்ப அண்ணல் ஆண்டுஇருந் தான்.அழகு அருநறவு என்னக் கண்ணும் உள்ளமும் வண்டுளனக் களிப்புறக் கண்டான்' (மந்திரப் படலம், 50) இராமன்மாட்டுச் சுமந்திரன் கொண்ட தாயன்பு இன்னும் விரிவாகப் பின்னர்ப் பேசப்படுகிறது.