பக்கம்:கம்பன் கலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனைக் கற்கும் நெறிமுறைகள் டாக்டர் தமிழண்ணல் இன்றைய தமிழ் மக்கள்-மாணவர்கள், கம்பனை எங்ங்னம் நூலிழைபோலக் கருத்தைப் பற்றிக்கொண்டு, தொடர்ந்து கற்கவேண்டும் - துய்க்கவேண்டும் என்பதை, இந்நூல் சொல்லாமல் சொல்லி வழிகாட்டுகிறது. மேலைநாட்டில் ஷேக்ஸ்பியர் கிரிட்டிக் மில்ட்டன் கிரிட்டிக் எனப் பெயரிய இலக்கிய விற்பன்னர்கள் திகழ்ந்ததுபோல கம்பன் திறனி' எனப் போற்றப் பெறுபவர் பேரா. அ.ச.ஞா. அவர்கள். அனுபவமிக்க, பழுத்த பெரும் பேராசிரியரின் துணையோடு கம்பன் என்ற பூஞ்சோலைக்குள் புகுந்து, அவர் வழிகாட்ட, உலாவரும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் வரியிலிருந்து முடிவு வரிவரை, சொல்லுக்குச் சொல் தெளிவுபெற எழுதப்பெற்ற இந்நூலை, இதுபோன்ற ஆங்கில நூல்களுடன் வைத்துப் பாராட்டத் தோன்றுகிறது. தமிழ் நூல்களுடன் வைத்து ஏன் பாராட்டக் கூடாது என்றுதானே கேட்கிறீர்கள்? தமிழில் பிஎச்.டி பட்டம் பெற்ற நூல் ஒன்றைப் படித்துவிட்டு, அதில் அவ் ஆசிரியர் செய்திருந்த கருத்துப் பிழை, சொற்பிழை, எழுத்துப்பிழை எல்லாவற்றையும் நோக்கி அழத் தோன்றியது. உடனே பக்கத் திலிருந்தவர் சொன்னார். "இதற்கெல்லாம் கவலைப் பட்டால் உங்கள் ஆயுள் நீடிக்காது; இதைவிட மோசமான நூல்கள் இதற்குப் பிறகு நிரம்ப வெளிவந்துவிட்டன” என்று கம்பனைப் படித்து, பயின்று, அனுபவித்து, ஆழமாய் மூழ்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/7&oldid=770808" இலிருந்து மீள்விக்கப்பட்டது