பக்கம்:கம்பன் கலை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ts 發 意 காதலும் கடமையும் சுமந்திரன் இராமன்மாட்டுக் கொண்டிருந்த அன்பு ஒரு தந்தை மைந்தனிடம் கொண்டிருந்த அன்பை ஒத்ததாகும். தசரதன் இராமன்மேல் கொண்டிருந்த காதலுக்குச் சோதனை வந்தது போலவே சுமந்திரனுடைய அன்புக்கும் சோதனை வந்து விட்டது. இருவரும் கடமையை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருப்பவர்கள். ஒருவன் மன்னவன், மற்றவன் அவனுடைய அமைச்சன் மன்னவனும் அமைச்சனும் கடமையை மறந்து அன்பின் வழிச் சென்றுவிட்டால் இவ்வுலகம் என்ன ஆவது? தனிப்பட்ட தங்களுடைய அன்பை மறந்து கடமையை நிறைவேற்றக் கூடியவர்கள் மட்டுமே அரசராகவும் அமைச்சராகவும் இருக்கத் தகுதி வாய்ந்தவர்கள். எனினும் அரசனும் அமைச்சனும் மனிதர்கள்தாம். அவர்கட்கும் விருப்பு வெறுப்புகளும் மகிழ்ச்சி துயரங்களும் உண்டு. ஆனால், இந்த விருப்பு வெறுப்புகள் அவர்களுடைய கடமையில் தலையிடுதல் கூடாது. துயரம் வந்த பொழுது அவர்களும் அது தாளாமல் கண்ணிர் விட்டுக் கதற உரிமை உண்டு. துயரத்தைப் போக்கிக் கொள்ள மற்றவர்போல் முயற்சி செய்யவும் உரிமை உண்டு. ஆனால், துயர் போக்கும் முயற்சியில் கடமைக்கு ஊறு நேர்வதாயின் அவர்கள் துயர் போக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/70&oldid=770809" இலிருந்து மீள்விக்கப்பட்டது