பக்கம்:கம்பன் கலை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 63 அழைத்துச் செல்லவேண்டும்? என்ன கொடுமையான ஆணை? அயோத்தியிலேயே வேறு தேர் வல்லான் அகப்படவில்லையா? முதல் அமைச்சன்தானா இந்தக் கொடிய செயலை நிறைவேற்ற அகப்பட்டான்! ஆம்! அன்புக்கும் கடமைக்கும் போராட்டம்! எது வெற்றி பெறப் போகிறது? ஏன் ? ஐயம் என்ன? கடமைதான்! அறுபதினாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த கிழவன் தானாகக் காடு போகிறேன் என்று கூறினான். ஆனால் சுமந்திரன் அந்தச் சொற்களைத் தன் வாயாற்கடிடக் கூறக்கூடாது என்று அஞ்சி மங்கலமான, மறைமுகமான சொற்களால் பேசினான் அல்லனோ? அதே சுமந்திரனுக்கு-கிழவன் காடு செல்வதை வாயாலும் கூற அஞ்சிய சுமந்திரனுக்குஇளங்காளைகள் இருவரையும், பேதைப் பெண் ஒருத்தியையும், தானே நேரே கொண்டு சென்று காட்டில் விடவேண்டிய தண்டனை வந்துவிட்டது; என்ன செய்வான்? அன்பை அவித்துக் கடமைமேல் எழவேண்டிய நிலைமையில் சுமந்திரன் முதல் அமைச்சன் என்பதற்கு ஏற்பக் கடமையைச் செய்தே விட்டான். இராம இலக்குவர்கள் காட்டிற்குப் புறப்பட்டவுடன் அவர்களுடன் தொடர்ந்து ஒரு மக்கட் கடலும் உடன் சென்றது. இரவில் ஒரு சோலையில் இராமன் தங்கவே அக்கூட்டமும் உடன் தங்கி விட்டது. அவர்களை எவ்வாறேனும் திருப்பி அனுப்பிவிட எண்ணிய இராமன் சூழ்ச்சி ஒன்று செய்தான். சுமந்திரனை இரவோடு இரவாகத் தேரை ஊர் நோக்கிச் செலுத்தச் செய்துவிட்டுத் தானும் அந்தக் காரிருளில் காடுநோக்கிப் புறப்பட்டு விட்டால் என்ன? விடிந்ததும் மக்கட்கூட்டம் இராமனைக் காணாமல் தவிக்கும். ஆனால், தேர்த் தடம் ஊர்நோக்கிச் செல்லுவதால் இராமனும் மீண்டுவிட்டான் என்று கருதி அக்கூட்டமும் அயோத்தி மீண்டுவிடும். இவ்வாறு கருதிய இராமன் அந்தச் சோலையில் சுமந்திரனை ஒரு தனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/73&oldid=770812" இலிருந்து மீள்விக்கப்பட்டது