பக்கம்:கம்பன் கலை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 65 சேர்கிறது? ஐயனே! உன்னை இக்காட்டிலே விட்டுவிட்டு வெறும் தேரையும் என் உயிரையும் கொண்டு சென்று அயோத்தியை அடைவேனாயின் இக்கொடிய கட்டளையைப் பிறப்பித்த அத் தாயினும், அவளைத் துரண்டிய விதியினும், கொடுமையில் யானே மேம்பட்டவன்’ என்ற கருத்துப்பட, "செவ்விய குரிசில் கூறத் தேர்வலான் உணர்த்து வான்.அவ் வெவ்விய தாயின் தீய விதியினின் மேலன் போலாம்" (தைலமாட்டு படலம், 20) என்று கூறி வருந்துகிறான். கைகேயியைவிடத் தான் கொடியவனாக ஆயின நிலைமையை நினைக்கும் பொழுது சுமந்திரன் பாகாய் உருகுகிறான். தீமையை நினைந்து செய்த கைகேயி எங்கே? நலம் புரியவேண்டும் என்று நினைத்திருந்தும் சந்தர்ப்பங் காரணமாக இக்கொடிய செயலைச் செய்ய நேரிட்ட தான் எங்கே? இதனை நினையுந்தோறும் அவன் மனம் எல்லையற்ற துயரக் கடலில் தவிக்கிறது. - இத்துயரம் நீங்குவதன்முன் மற்றொரு துயரம் அவனைப் பிடித்துக் கொள்கிறது. மீண்டு சென்றவுடன் தன் வரவை எதிர்நோக்கி உயிரை வைத்துக் கொண்டிருக்கும் மன்னனுக்கு யாது விடை கூறுவது? - 'பூங்கொடி போன்ற மிதிலைப் பொன்னையும், தம்பியையும், இராமனையும் கானகத்தில் செலுத்தினேன் என்று கூறட்டுமா? உடன் அவர்களையும் அழைத்து வந்துவிட்டேன் என்று கூறட்டுமா? மெல்லிய பாதங்களை உடையவர்களை வலிய பரற்கற்கள் நிறைந்த காட்டில் நடக்குமாறு ஏவிவிட்டு யான் மட்டும் இனிய தேரில் ஏறி நலத்துடன் வந்துற்றேன் என்று கூறட்டுமா?” என்று அரற்றுகிறான் அத்தேர்வலான். - -

  • 5
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/75&oldid=770814" இலிருந்து மீள்விக்கப்பட்டது