பக்கம்:கம்பன் கலை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ல் கம்பன் கலை "தாருடை மலரினும் ஒதுங்கத் தக்கிலா வாருடை முலையொடு மதுகை மைந்தரைப் பாரிடைச் செலுத்தினேன் பழைய நண்பினேன் தேரிடை வந்தனன் திதிலேன் என்கோ" (தைலமாட்டு படலம், 22) தசரதன்மாட்டும் இராமன்மாட்டும் தான் கொண்ட நட்பையும் அதன் பழமையையும் நினைந்து பார்க்கிறான் சுமந்திரன். இந்த நள்ளிருளில், நடுக்காட்டில், நட்புடையார்கள் இவ்வாறு செய்வார்களா? அதிலும் பழமையான நட்புடையவர்கள் இவ்வாறு நினைக்கவும் துணிவார்களா? "சாவில் சாதல், நோவில் நோதல், ஒண் பொருள் கொடுத்தல், பிரிவு நனி வருந்துதல்” என்பவை அல்லவோ நட்பின் இலக்கணம்? நட்புடையார்கள் தம்மால் அன்பு செய்யப்பட்டவரை நட்ட நடுநிசியில் காட்டில் நடக்குமாறு விட்டு விட்டுத் தாம் மட்டும் தேரில் ஊர்ந்து சென்ற வரலாற்றை இது வரை எங்கேனும் கண்டதுண்டா? கேட்டதுதான் உண்டா? அரண் மனைக்குள் சென்றவுடன் தசரதன் முகத்தில் விழிக்க வேண்டாவா? மைந்தர்கள் எங்கே என்று மன்னவன் கேட்கும் பொழுது என்ன விடை கூறுவது?-என்று வருந்துகிறான் சுமந்திரன். - ஆனால், தசரதனிடம் கூறுவாயாக என்று இராமன் சில சொற்களைக் கூறி விடுக்கிறான். மைந்தன் மீண்டு வந்தான் என்று கூறும் சொற்கள் தவிர வேறு எந்தச் சொற்களையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் மன்னன் இருக்கமாட்டான் என்பதைச் சுமந்திரன் நன்கு அறிவான். அதிலும் இராமன் உறுதியாகக் காட்டில் சென்றுவிட்டான் என்று கூறினால், அச்சொற்களின் விளைவு என்ன என்பது பற்றியும் சுமந்திரன் அறிவான். அறுபதினாயிரம் ஆண்டுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/76&oldid=770815" இலிருந்து மீள்விக்கப்பட்டது