பக்கம்:கம்பன் கலை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 67 வாழ்ந்த தசரதனை, சம்பராசுரனைப் போர் தொலைத்த தசரதனைக் கொல்வது என்பது எளிதான செயல் அன்று. போரில் அவ் வேந்தனைக் கொல்லல் இயலாதேனும் ஓர் எளிய வழி உண்டு என்பதனை அவனிடம் பழகியவர்கள் அனைவருமே அறிவர். கிழவேந்தனுடைய உயிர் நாடி அவன் மைந்தனாகிய இராமனிடம் அன்றோ இருக்கிறது! எனவே, இராமனைப் பிரித்து விட்டால் தசரதனுடைய உயிர் பிரிவது உறுதி. மற்றொரு வகையாகக் கூறுமிடத்துத் தென்திசைக்கோனாகிய எமன் தசரதனை அணுகும் பொழுது இராமனைப் பிரிப்பதனையே ஒரு சூழ்ச்சியாகக் கொள்வான். இப்பொழுது சுமந்திரன் அரண்மனையுட் சென்று இராமன் காட்டினுள் சென்றுவிட்டான் என்று கூறும் சொற்கள் எமனுடைய துாதாக அமைந்துவிடும் மன்னனுக்கு. இதுவே அமைச்சனின் அச்சம். ஐயனே, எமனுடைய துதுவனாக யான் செல்லட்டுமா? என்ற கருத்தில். "தென்புலக் கோமகன் துதிற் செல்கெனோ ?" (தைலமாட்டு படலம், 23) என்று பேசத்தொடங்கிய சுமந்திரன் அடுத்த பாடலில் மற்றுமொரு படி மேற்சென்று விடுகிறான். நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஒம்புமின் (புறம், 195) என்பது பழந்தமிழர் கண்ட அறம். இயலுமாயின் ஒருவருக்கு உதவி செய்யவேண்டும். ஆனால், இயலாக் காலத்து ஒன்றும் செய்யாமல் இருப்பதை யாரும் தவறு என்று கூறமாட்டார்கள். அவ்வாறு உதவி செய்யாமலும், சும்மா இராமலும் தீமை புரிகின்றவர்களை என்னவென்று கூறுவது? பிறருக்குத் தீமை செய்வதனையே தம் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்ட பெரியோர்களும் உண்டு. இத்தகையவர்களை நோக்கித் தான் பழந்தமிழன் மேற்கூறிய பாடலைப் பாடினான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/77&oldid=770816" இலிருந்து மீள்விக்கப்பட்டது