பக்கம்:கம்பன் கலை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ல் கம்பன் கலை போலும் தீமை செய்தலினும் பலவகை உண்டு. தமக்குச் செய்யப்பட்ட தீமைக்கு எதிராகத் தீமை செய்பவர் ஒரு சாரார். இத்தகைய நிலையில் தீமை செய்யப்பட்டவர் செய்தாரிடம் அதிகம் வருந்த வேண்டுவதின்று. ஏன் எனில், தாம் செய்ததற்கு எதிராகத்தானே இப்பொழுது தீமை செய்யப்படுகிறது என்று நினைத்து மனத்தில் அமைதி அடையலாம். ஆனால், தனக்கு ஒரு தீமையும் செய்யாத ஒருவனுக்குத் தீமை செய்தல் மிகவும் கொடியது. இதனைக் காட்டிலும் கொடியது தனக்கு நன்மையே புரிந்த ஒருவருக்குத் தான் தீமை செய்தல். இதனைத்தான் மனத்திற் கொண்டு பொதுமறை பாடிய பெரியார், 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" . . . (குறள், 110) என்று கூறிச் சென்றார். இந்த மூன்றாவது வகையைச் சார்ந்தவனாகவே தன்னைக் கருதிக் கொள்கிறான் சுமந்திரன். தசரதன் எனக்கு நன்மையே புரிந்தான். இப்பொழுது அவன் இறக்குந் தறுவாயில் இருக்கிறான். நகர மக்கள் அனைவருங்கூடி அவனைத் தேற்றி உயிரைப் பிடித்து வைத்துள்ளனர். இராமனை எவ்வாற்றானும் சுமந்திரன் கொணர்ந்து விடுவான் என்ற நம்பிக்கையால் உயிரை வைத்துக்கொண்டு இருக்கிறான் மன்னவன். அத்தகையவனிடம் சென்று, அரசே உன் மகனைக் காட்டில் விட்டு வந்துவிட்டேன்' என்று கூறுதலும், ஒரு வாளால் அவன் கழுத்தை வெட்டிக் கொன்று விடுதலும் ஒன்றுதான்-என்று இவ்வாறு நினைந்து அழுகிறான் அமைச்சர் பெருமகன். - "நாற்றிசை மாந்தரும் நகர மாக்களும் தேற்றினர் கொணர்வர்உன் சிறுவன் தன்னைஎன்று ஆற்றின. அரசனை ஐய வெய்யளம் கூற்று).அன சொல்லினால் கொலைசெய் வேன்கொலோ!" (தைலமாட்டு படலம், 24)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/78&oldid=770817" இலிருந்து மீள்விக்கப்பட்டது