காதலும் கடமையும் 69 மறுபடியும் எண்ணம் கைகேயியிடம் செல்லுகிறது. அரசனுடைய சீர் அழிவுக்கு அவளே காரணமாவாள். அவள் செய்த தீமையால் தசரதன் பெருந்துன்பம் அடைந்தது உண்மைதான். ஆனால், அவனுடைய உயிரை அவளோ, அவளுடைய சொற்களோ போக்கவும் இல்லை; போக்க முடியவுமில்லை. இப்பொழுது சுமந்திரன் சென்று 'இராமன் போய்விட்டான் என்ற இரண்டு சொற்களைக் கூறிய மாத்திரையில் அரசன் இறந்துவிடுவான் எனில், சுமந்திரன் கைகேயியைவிடத் தீயவன் என்று கருதப்பட மாட்டானா ? பிறர் அவ்வாறு நினைக்காவிடினும் சுமந்திரன் தன்னைப்பற்றி அவ்வாறு நினைத்துக் கொள்ளுகிறான். அவன் நண்பனாக இதுவரை இருந்து இப்பொழுது தன்னுடைய சொற்களால் அரசன் உயிர் குடிக்கப் போகிறான். கைகேயி அரசனுடைய பகையாளியாக இருந்தும் அவன் உயிரைப் போக்கவில்லை. ஆராய்ந்து பார்த்தால் அவளுடைய புறப்பகையைக் காட்டிலும் சுமந்திரனுடைய அகப்பகை மிகவும் கொடுமை உடையதாகக் காட்சியளிக்கிறது அவ்வமைச்சனுக்கு. "வாள்போல் பகைவரை அஞ்சற்க, அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு". (குறள், 882) எனவே, தன்னைத் தசரதனுடைய அகப்பகையாகவே மதித்த அமைச்சன் இதோ பேசுகிறான்: “அரசே! தீயை மூட்டி நீ வேள்வி செய்து பெற்று வளர்த்த சிங்கக்குட்டியாகிய இராமன் அகன்றான்” என்று கூறட்டுமா? அவ்வாறு கூறினால் தசரதனுக்கு என்னைவிடக் கைகேயியே சிறந்தவள் போலும் என்ற கருத்தில், - - "அங்கிமேல் வேள்விசெய்து) அரிதில் நீபெற்ற சிங்கஏறு) அகன்றது) என்று) உணர்த்தச் செல்கெனோ
பக்கம்:கம்பன் கலை.pdf/79
Appearance