பக்கம்:கம்பன் கலை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W111 அழகிய முத்துகளை, "கோசலம் புனை ஆற்றணி” கூறிய கம்பனோடு ஒத்திசைந்து, பேராசிரியர் நம் முன்வைக்கும் போது அவற்றை நம் உள்ளத்தே மகிழவும் ஆடிப் பாடவும் தோன்றுகிறது. திறனாய்வு நூல்கள் மூல நூல்களைப் படிக்கத் துணையாக வேண்டுமே தவிர, பிறவாறமைதல் கூடாது என்பர். கம்பனின் இராம காதையை மிகத் திட்டநுட்பத் தோடு ஆராயும் இந் நூல் எதிர்காலத்திலும் கம்பனை கற்கச் சிறந்த ஆற்றுப்படையாகும் என்பதில் ஐயமில்லை. பேராசிரியர், இந்நூலுள் பெரிதும் பாத்திரப்படைப்பு ஆராய்ச்சியையே மேற்கொள்கிறார். தசரதன், கைகேயி, குகன், பரதன், ராமன், சீதை எனக் கம்பனின் படைப்புத் திறத்தைக் காட்டுமாறு, பலரையும் அகமும் புறமும் கண்டு அதை ஆராய்கிறார் ஆசிரியர். மூரிய தேர்வலானாகிய சுமந்திரன் முதல், ஒரே பாட்டுடையனாகிய சத்துருக்கன் வரை பேராசிரியர் இனங்கண்டு கொள்ளும்பொழுது, நாம் முன்னர் அறிந்தவர்களேயாயினும். அவர்களைப் புதிய பொலிவோடும் நுட்பத்தோடும் அவர் காட்டக் கண்டு' மகிழ்கிறோம். கம்பன் கண்ட அறம், வழக்கறிஞனாகத் திகழும் கம்பன், உவமை நயம், முரணில் முழுமுதல், தீக்குளித்தது ஏன், கவிஞன் கண்ட சமரசம் என இவ்வாறு பாத்திர நோக்கிலன்றிப் பொருள் நோக்கிலான கட்டுரைகளும் உள. * - ஆயினும், அவை எல்லாவற்றிலுமே பாத்திர விளக்க நோக்கமே இவ்வாசிரியர்பால் தலைதூக்கி நிற்கிறது. "வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதன்றே" என்று இராமனைக் கண்ட சுக்கிரீவன் முடிவுக்கு வருகிறான். இவ்வாறு மானுடம் பாடிய கம்பன் எத்துணை அழகாக ஆழமாகப் புதிய பார்வையில் அழுத்தமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/8&oldid=770819" இலிருந்து மீள்விக்கப்பட்டது