பக்கம்:கம்பன் கலை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ல் கம்பன் கலை எங்கள்கோ மகற்கு இனி எண்ணில் கேகயன் நங்கையே கடைமுறை நல்லல் போலுமால்" - - (தைலமாட்டு படலம், 25) 'காட்டிற்குச் செல்க என்று ஆணையிட்ட அவளைக் காட்டிலும் காட்டில் கொண்டு செலுத்திய நான் தீயவனே என்று நினைக்கிறான் அவன். - இவ்வாறு பலவும் கூறி வருந்திய சுமந்திரனை இராமன் மார்புறப் புல்லிப் பலவாய நீதிகளையும் எடுத்துக்கூறி மனம் தேற்றினான். ஒருவாறு மனந்தேறிய சுமந்திரன் அம்மூவரையும் என்ன செய்தி சொல்லியனுப்புகிறார்கள் என்று வினவினான். இராமன் கூறியவற்றைக் கேட்டுக்கொண்ட பிறகு சீதையை நோக்கி 'நீவிர் யாது கூறுகிறீர்?" என்று கேட்டான். "அன்னவள் கூறுவாள் அரசர்க்(கு) அத்தையர்க்கு என்னுடை வணக்கமுன் இயம்பி யானுடைப் பொன்னிறப் பூவையும் கிளியும் போற்று(க) என்று என்னுடை எங்கையர்க்கு உணர்த்துவாய் என்றாள்" “தேர்வலான் அவ்வுரை கேட்டுத் தீங்குறா ஆர்வலார் உயிர்துறப்(பு) எளிதன் றேயெனாப் போர்வலான் தடுக்கவும் பொருது விம்மினான் சோர்விலான் அறிவிலாத் துயர்க்குச் சோர்கின்றான்" - (தைலமாட்டு படலம், 40, 41) பெரியதொரு தீமை ஏற்பட்டிருக்கும் பொழுது அத் தீமையின் ஆழத்தையும் அகலத்தையும் அறிந்து கொள்ள முடியாத இளங் குழந்தைகள் விளையாட்டு முறையில் ஏதேனும் பேசிவிடுவதைக் காணுகிறோம். அத்தகைய சந்தர்ப்பங்களில் உடன் இருப்பவர்கள் குழந்தையின் பேச்சைக் கேட்டு நகைப்பதற்கு மறுதலையாக அழுவதையும் காண்கிறோம். நடைபெற்றுள்ள தீமையை அறிந்து கொள்ளச் சக்தி அற்ற குழந்தைகளின் எளிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/80&oldid=770820" இலிருந்து மீள்விக்கப்பட்டது