பக்கம்:கம்பன் கலை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 73 படையெடுத்து வந்ததாகக் கருதிப் பெருஞ் சீற்றத்துடன் இருக்கிறான் எதிர்க்கரையில் இந்நிலையில் வடகரையில் நிற்கும் பரதனுக்குத் தென்கரையில் இருக்கும் குகனைப் பற்றிச் சில சொற்கள் கூறி அறிமுகம் செய்து வைக்கிறான் அமைச்சர் பெருந்தகை சுமந்திரன். இதோ குகனைப்பற்றிச் சுமந்திரன் பேசுகிறான்: "கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான் உங்கள்குலத் தனிநாதற்கு) உயிர்த்துணைவன் உயர்தோளான் வெங்கரியின் ஏறனையான் வில்பிடித்த வேலையினான் கொங்(கு) அலரும் நறும்தண்தார்க் குகன்என்னும் பெயருடையான்" "கல்காணும் திண்மையான் கரைகாணாக் காதலான் அல்காணில் கண்டனைய அழகமைந்த மேனியான் மல்காணும் திருநெடுந்தோள் மழைகாணும் மணிநிறத்தாய் நின்காணும் உள்ளத்தான் நெறிஎதிர்நின் றனன்என்றான்." - (குகப்படலம், 25, 26) நாம் அறிந்தவரையில் இராமனை நடு இரவில் சோலையில் விட்டுப்போன சுமந்திரன் மீண்டும் இப்பக்கம் இப்பொழுதுதான் வந்துள்ளான். குகன் இராமனுடன் பழகியதை அவன் கண்டிருக்க நியாயம் இல்லை. அவ்வாறு இருந்தும் இராமன்மாட்டுக் குகன் கொண்டிருந்த காதலைச் சுமந்திரன் இவ்வளவு விரிவாக எவ்வாறு எடுத்துக் கூற முடிந்தது? இராமனும் குகனும் சந்தித்ததைச் சுமந்திரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/83&oldid=770823" இலிருந்து மீள்விக்கப்பட்டது