பக்கம்:கம்பன் கலை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ) கம்பன் கலை தன்னுடைய கண்களாற் காணவில்லை என்பது மெய்ம்மைதான். ஆனாற் அமைச்சனாகிய அவன் ஏனையோர் போலக் கண்களால் மட்டுமா காண்கிறான்? 'செவியிற் காணும் திறம் படைத்தவனல்லனோ அமைச்சன் என்று கூறப்படுவான்? எனவே, சிறந்த அமைச்சனாகிய சுமந்திரன் இராமனைக் காட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டாலும், அவ்விராமனுடைய நலம் தீங்குகளில் பெருங் கருத்துடையவனாய் இராமனும் அறியாமல் தான் மட்டும் ஒற்றர் மூலம் அவனைக் கவனித்து வந்துள்ளான் என்றுதான் கருதவேண்டியுள்ளது. இங்ங்னம் குகனைப்பற்றிச் சுமந்திரன் அறிந்திருப்பதில் இரண்டுவகை நன்மை உண்டு. ஒன்று அருமை மன்னனாகிய இராமனுடைய நண்பர்கள் எத்தகையவர் என்று அறிவது, இரண்டாவது அயோத்தி நகரின் எல்லையில் வாழும் குகன் அயோத்தி மன்னனிடத்தில் எந்த மனப்பான்மையுடன் பழகுகிறான் என்பதை அறிவது. எனவே, தலையாய அமைச்சன் கடமையை நிறைவேற்றுமுகமாகவே உளது சுமந்திரன் குகனைப் பற்றி அறிந்திருப்பது. மூரிய தேர்வலானாகிய சுமந்திரன் தசரதனுக்குச் செல்வக் காலத்தும் அல்லற்காலத்தும் சிறந்த நண்பனாயும், இராமனிடம் கழிபெரும் காதல் கொண்ட நண்பினனாயும், பரதனுடைய பெருந்தன்மையை அறிந்து பழகும் பண்பினனாகவும், அயோத்தி அரசை நன்கு காத்துக் கடமை புரியும் அமைச்சனாகவும் இருந்தான் என்பது வெளிப்படை சுமந்திரனைப் பற்றிப் பேசும் முகமாகக் கம்பநாடன் தன்னுடைய அரசியல் அறிவின் ஒரு பகுதியை நமக்கு எடுத்துக் காட்டுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/84&oldid=770824" இலிருந்து மீள்விக்கப்பட்டது