பக்கம்:கம்பன் கலை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கம்பன் கலை மாற்றாள், அவள் மகன் என்ற வேறுபாடு தோன்றி இராது. எனவே, அறிவின் துணை கொண்டு நடைபெற்ற இச்சூழ்ச்சியில் அகப்பட்டு, அல்லல்பட்டு நாட்டை விட்டுக் காட்டிற்கு வந்தபொழுதும் கூட, முன் பின் பழக்கமில்லாத காட்டு வாழ்க்கையில் அகப்பட்டுக் கொண்டனரே என்று யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக அந்த அரச குமாரனின் மூலம் தம்முடைய பிறவிப் பயனைப் பெற விரும்புகிறார்களே தவிர, மானிடவடிவம் தாங்கிய அக்குமாரர்கட்குப் பசி, தாகம் முதலியன இருக்குமே, உடல் சோர்வுற்று இருக்குமே என்று யாரும் கவலையுற்றதாகத் தெரியவில்லை. அறிவின் துணை கொண்டு இராமனின் அவதார காரணத்தை அறிந்தமையால் போலும் முனிவர்கள் அவன் நாடுவிட்டுக் காடு போந்தமைக்குப் பெரிதும் கலங்கிவிடவில்லை. இந்நிலையில் அறிவால் பெற்ற பயனைக் கண்டு போதும் போதும் என்று ஆகி விட்டது இலக்குவனுக்கு இந்த இக்கட்டான நிலையில், அறிவுலகத்திற்குப் பலகாத தூரம் எட்டியவனாகிய குகன் எதிரே தோன்றுகின்றான். வந்துள்ளவர்கள் யார்? முழுமுதல் பொருளா? அல்லது பரமனின் அம்சங்களைப் பெற்றவர்களா? பிறவி நோய்க்கு அவர்கள் மருந்து ஆவார்களா? என்றெல்லாம் அந்தக் குகன் ஒரு சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவ்வாறு ஆராய அவனுக்குப் போதுமான அறிவும் இல்லை. அரசகுமாரன், அறியாமையின் காரணமாக, காட்டு வாழ்க்கையின் கடுமையைச் சிந்தித்துப் பாராமல் ஒரு பெண்ணையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டான். இதை அறிந்தவுடன் தாய்மனம் படைத்த அந்தக் குகனுக்கு உள்ளம் உருகுகின்றது. எப்படியாவது அவர்கள் துயரைத் துடைக்க வேண்டும் என்று எண்ணுகிறான். முதன் முதலாக அவனுடைய உள்ளத்தில் தோன்றக்கூடிய ஒரே எண்ணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/88&oldid=770828" இலிருந்து மீள்விக்கப்பட்டது