பக்கம்:கம்பன் கலை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ல் கம்பன் கலை நீ நலமாக இருக்கிறாயா என்றுகூட ஒரு வார்த்தையும் கேளாமல், ஐயனே, தேனையும் மீனையும் உண்பதற்கேற்ற முறையில் பக்குவப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறேன். இப்பொழுது உண்கின்றாயா. சிறிதுநேரம் கழித்து உண்கிறாயா என்ற கருத்தில் தேனும் மீனும் திருத்திய கொணர்ந்தேன், திருவுளம் என்கொல்? என்று பேசுகிறான் எல்லை நீத்த அன்புடையவனாகிய குகன், இவ் வார்த்தைகளைக் குகன் கூறி முடித்தவுடன் இராமபிரான், ‘விருத்த மாதவரை நோக்கி முறுவலன் விளம்பலுற்றான்' என்று கம்பன் பாடிச் செல்கின்றான். முனிவர்களை நோக்கி இராமன் முறுவலிப்பதற்கு இங்கே என்ன நிகழ்ந்தது? முறுவலித்தல் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் புன்சிரிப்பு என்பது இன்றைய நாளில் நாம் கொள்ளுகின்ற பொருளாயினும், அதனுடைய உண்மையான பொருள் கேலி செய்து புன்முறுவல் செய்வது அல்லது எள்ளி நகையாடல் என்பதாகும். முனிவர்களை நோக்கி இராகவன் எள்ளற்குறிப்புடன் புன்சிரிப்புச் செய்த காரணம் யாதோ?ஆழ்ந்து சிந்தித்தால் இப் புன்சிரிப்பின் காரணம் விளங்காமல் போகாது. அறிவின் துணைகொண்டு முழுமுதற் பொருளைத் தேடித் திரிகின்ற இம் முனிவர்கள், தம்மால் தேடப் பெற்ற பரம்பொருளை நேரே கண்டுவிட்ட காரணத்தால் ஓரளவு இறுமாந்து நிற்கின்றார்கள். அவ்விறுமாப்பிற்குக் காரணம், 'கற்பனை கடந்த பொருளைக் கண்ணெதிரே கண்டு விட்டோம்' என்பதேயாகும். அங்ங்னம் எண்ணிய வுடனேயே ஒரளவு இறுமாப்பு அல்லது அகங்காரத்தைப் பெற்றுவிடுகிறார்கள். அகங்காரம் முழுமுதற் பொருளைக் கண்டுவிட்ட காரணத்தால் ஏற்பட்டதுதான். ஆதலின், இக்குறை மன்னிப்பதற்குரியதுதான். நம் போன்றவர்களின் நிலைமையிலிருந்து ஆராயும்போது இந்த இறுமாப்பை அல்லது அகங்காரத்தைத் தவறாக எடுத்துக்கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/90&oldid=770831" இலிருந்து மீள்விக்கப்பட்டது