பக்கம்:கம்பன் கலை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறுவலித்தது ஏன் ? 81 வேண்டியதில்லை. ஆனால், இராமனுடைய நிலையில் நின்று பார்க்கும் போது, அவர்களிடம் காணப்பெற்ற இந்த அகங்காரம் தடை விதிக்கப்பட வேண்டியதாகக் காட்சியளிக்கிறது. இறைவனைக் காணும் பேறு பெற்றோம் என்ற சிறந்த அடிப்படையில் தோன்றியதாயினும் அகங்காரம் அகங்காரந்தானே! எனவே, அதனைக் களையவேண்டிய கடப்பாடு இராகவனுடைய பொறுப்பாக ஆகிவிடுகிறது. ஆகவே, முனிவர்களைப் பார்த்து அவன் முறுவலிக்கும்போது உங்களுடைய அன்பையும் இதோ எதிரே நிற்கின்ற குகனுடைய அன்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எது உயர்ந்தது என்பதை நான் அறிகின்றேன். அறிவின் துணை கொண்டு என்னைக் காண முயன்று கண்டுவிட்டதாகக் கருதி ஓரளவு இறுமாந்து நிற்கின்ற உங்களைக் காட்டிலும், என்னுடைய தன்மையை ஒரு சிறிதும் அறிந்து கொள்ளாமலும் அறிய முயலாமலும், இக்குகன் தன்னுடைய அன்பு, பரிவு என்ற இரண்டாலும் தான் வேறு, யான் வேறு என்ற வேறுபாட்டைப் போக்கித் தன்னையே என்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டான்' என்று கூறுவதுபோல் அமைந்து இருக்கிறது. இப்புன்முறுவல்! வேத முதற் காரணனாகிய இராமன் அனைத்தையும் கடந்தவன். வேண்டுதல்-வேண்டாமை இல்லாதவன் என்பதைக் குகன் அறிந்திருப்பின் ஒருவேளை இராமனுக்கு உணவு தேவையில்லை என்று கருதி இருக்கலாம்; அல்லது கனி கிழங்குகளை மட்டுமே புசிக்கக் கூடியவன் இராமன் என்பதையேனும் அறிந்திருக்கலாம். ஆனால், அந்தப் பேத உணர்ச்சி குகனிடம் இல்லை. தன்னை நோக்க இராமன் இளையவன் ஆவான்; தனக்கு ஏற்படுகின்ற பசி தாகங்கள் இராமனுக்கும் கண்டிப்பாக உண்டாகும்; எனவே, தன்னுடைய பசி தாகத்தைப் போக்கத் தான் முயற்சி செய்வது போலவே, இளையவனாகிய இராமனுடைய பசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/91&oldid=770832" இலிருந்து மீள்விக்கப்பட்டது