பக்கம்:கம்பன் கலை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ல் கம்பன் கலை கூறியவற்றை அனைவருமே கேட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள். அப்படியிருக்க, இராகவன் சீதையையும் தம்பியையும் ஒரு முறை ஏறிட்டுப் பார்த்து, ஒரு வினாடி தாமதித்து, பிறகு குகனுக்கு விடை கூறுவதன் நோக்கம் யாது? தங்கள் தங்களுடைய் அன்பையே பெரிது என்று கருதிக் கொண்டிருக்கும் இவ்விருவரும் (சீதை, இலக்குவன்) குகனுடைய அன்பை ஒருவேளை சரிவரக் கணிக்காமல் இருந்து விடுவார்களோ என்கின்ற கருத்துப்போலும்! அவர்கள் இருவருடைய கவனத்தையும் ஈர்க்கின்ற முறையில் சீதை, தம்பி இருவரின் திருமுகம் நோக்கினானாம் அனைவருடைய உள்ளத்தையும் கொள்ளை கொண்டவனாகிய கமலக்கண்ணன். மனைவி, தம்பி ஆகிய இருவருக்கும் நோக்கு ஒன்றினாலேயே அறிவுறுத்திவிட்டான். * . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/94&oldid=770835" இலிருந்து மீள்விக்கப்பட்டது